“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இருந்து விலகிய நடிகை மீனா ஹேமா? ரசிகர்கள் ஷாக்!

0
"பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியலில் இருந்து விலகிய நடிகை மீனா ஹேமா? ரசிகர்கள் ஷாக்!
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இருந்து விலகிய நடிகை மீனா ஹேமா? ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மீனா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஹேமா. இவர் சீரியலில் இருந்து இடைவெளி எடுத்து கொண்டு திருப்பதி கோவிலுக்கு தனது குடும்பத்துடன் சென்றிருக்கிறார்.

நடிகை ஹேமா:

தமிழ் சின்னத்திரையில் சிறந்த குணசித்திர நடிகையாக மக்களிடம் பிரபலமானவர் ஹேமா. அவர் பல சீரியல்களில் நடித்திருந்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா கதாபாத்திரம் தான் மக்களிடம் அவரை கொண்டு சென்றது. அந்த அளவிற்கு தன்னுடைய நடிப்பால் மீனாவாகவே வாழ்ந்து வருகிறார். திருமணம் ஆன ஹேமா கடந்த ஆண்டு கர்ப்பமாக இருந்தார். தொடர்ந்து அவர் சீரியலில் நடித்த நிலையில் சீரியலிலும் அவர் கர்ப்பமாக இருப்பது போல காட்டப்பட்டு பிரசவம் வரை கொண்டு செல்லப்பட்டது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் தூங்கிய கயல் பாப்பா – கண்ணன் வெளியிட்ட வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!

பின் கதையில் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு அவரை மீண்டும் நடிக்க வைத்தது. பிரசவம் வரை அவர் சீரியலில் நடித்தது பலரின் பாராட்டுகளை பெற்றது. இந்நிலையில் அவர் கதாபாத்திரம் சீரியலில் நெகட்டிவ் ரோல் போல காட்டப்பட்டாலும் இறுதியில் அது நகைச்சுவையாக மாற்றப்படுகிறது. அடுத்த நாளே எதுவும் நடக்காதது போல அவர் நடந்து கொள்வார். என்ன சண்டை, மனக்கசப்பு இருந்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை எங்கேயும் விட்டுக் கொடுக்காமல் இருப்பதே அந்த கதாபாத்திரத்தின் தனி சிறப்பு.

திருமண பந்தம் பற்றிய சமந்தாவின் மனதை உருக்கும் பதிவு – கவலையில் ரசிகர்கள்!

இந்நிலையில் அவர் தனியாக யூடுப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் செட் குறித்தும், பிரசவ கால குறிப்புகள், குழந்தை வளர்ப்பு போன்றவற்றை பற்றி வீடியோக்களை பதிவிடுவார். தற்போது அவர் சீரியலில் இருந்து விலகி குடும்பத்துடன் திருப்பதிக்கு ஆன்மீக சுற்றுலா சென்றிருக்கிறார். அது குறித்த வீடியோ ஒன்றை தனது சேனலில் பதிவிட்டுள்ளார். இதனால் சீரியலில் இருந்து சிறிது இடைவெளி எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. எனவே அவர் சீரியலில் இருந்து விலகி விட்டதாக சில YouTube சேனல்கள் போலி செய்திகளை பரப்ப தொடங்கி விட்டன. இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!