‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் தூங்கிய கயல் பாப்பா – கண்ணன் வெளியிட்ட வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கடைசி தம்பியாக கண்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சரவண விக்ரம் மற்றும் குட்டி பாப்பா கயல் இணைந்து எடுத்த க்யூட் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் அன்பான ஒற்றுமையான குடும்பம் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என எடுத்துக்காட்டாக இருக்கிறது. இந்த சீரியலில் மூர்த்தி, கதிர், ஜீவா, கண்ணன் என நான்கு அண்ணன் தம்பிகளும் பாசத்துடன் இருக்கின்றனர். வீட்டில் சிறு சிறு சண்டைகள் வந்தாலும் அதை எல்லாம் விட்டு கொடுத்து வாழ்வது எப்படி என இந்த சீரியல் பார்த்து தெரிந்து கொள்ளலாம். கடைசி தம்பியாக கண்ணன் கதாபாத்திரத்தில் சரவண விக்ரம் நடித்து வருகிறார்.
திருமண பந்தம் பற்றிய சமந்தாவின் மனதை உருக்கும் பதிவு – கவலையில் ரசிகர்கள்!
அவர் காதல் திருமணம் செய்ததால் மூத்த அண்ணன் மூர்த்தியின் கோவத்தால் வீட்டை விட்டு வெளியே அனுப்பப்படுகிறார். அதனால் குடும்பத்தில் விரிசல் ஏற்படுகிறது. பின் லட்சுமி அம்மா இறக்க அந்த பழி கண்ணன் மீது விழுகிறது. செல்லமாக வளர்ந்த கண்ணன் தற்போது பல கஷ்டங்களை தாண்டி ஒரு வேலையில் சேர்கிறார். அதிலும் பிரச்சனை வர கண்ணனை சரமாரியாக அடிக்கின்றனர். அதனால் கண்ணன் மீது பரிதாபப்பட்டு தனம் அவனை வீட்டிற்குள் அழைத்து வருகிறார்.
தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீண்டும் சந்தோசம் திரும்பி இருக்கிறது. சென்ற வாரம் கயலின் முதல் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தற்போது இந்த வாரம் கயல் மொட்டை போடும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. மேலும் காது குத்தும் வர இருப்பதால் தாய்மாமன் முறை செய்ய தனம் ஜெகாவை கூப்பிடுகிறார். இந்நிலையில் கண்ணனும் கயலும் செய்த க்யூட் வீடியோ வைரலாகி வருகிறது. அதில் கண்ணன் வீடியோ எடுக்க கயல் கொட்டாவி விடுகிறார். பொங்கல் சாப்பிடாதே என சொன்னால் கேட்டா தான என கண்ணன் நகைச்சுவையாக சொல்லி இருக்கிறார்.