விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வெண்பாவுக்கு ஆப்பு வைத்த புதிய நபர் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

0
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' சீரியலில் வெண்பாவுக்கு ஆப்பு வைத்த புதிய நபர் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' சீரியலில் வெண்பாவுக்கு ஆப்பு வைத்த புதிய நபர் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வெண்பாவுக்கு ஆப்பு வைத்த புதிய நபர் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளங்கள் உள்ளது. அந்த வரிசையில் உள்ள பாரதி கண்ணம்மா தொடர் தற்போது ரசிகர்கள் மத்தியில் பொறுமையை இழக்க செய்தது மட்டுமல்லாமல் பல விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. இந்நிலையில் புதிதாக வில்லி வெண்பாவுக்கே ஆப்பு வைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அடுத்து நடக்கப்போவது என்ன?

உலகளவில் இருக்கும் அனைத்து வீட்டின் இல்லத்தரசிகளின் பொழுது போக்கு என்றால் அது சீரியல் மட்டுமே. அதிலும் விஜய் டிவி சீரியல் என்றால் அதற்கென தனி ரசிகர் கூட்டங்கள் உள்ளது. இவ்வாறு பாரதி கண்ணம்மா சீரியல் ஒரு காலத்தில் வேற லெவல் பீக் சென்றது. அதன் பிறகு புதைத்து வைத்த பொக்கிஷத்தை தூசு தட்டி எடுத்தது போல சில நாட்களாக ஓரளவு விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சென்றது. இதனால் ரசிகர்களும் ஒரு வழியாக பாரதியும்,கண்ணம்மாவும் சேர்ந்து விடுவார்கள் என்று எண்ணினார்கள். ஒரே ஒரு DNA டெஸ்ட் மொத்த ஜோலியும் முடிந்துவிடும் ஆனால் அதை மட்டும் செய்ய மறுக்கிறார் இயக்குனர்.

புது காரில் குழந்தை உடன் பயணித்த ஆலியா, சஞ்சீவ் ஜோடி – ரசிகர்கள் வாழ்த்து! வைரலாகும் வீடியோ!

இந்நிலையில் இந்த வார ப்ரோமோ வெளியாகாததால் அடுத்து என்ன நடக்கும் என்பது பற்றிய ஐடியா ரசிகர்களுக்கு இல்லை. ஆனாலும் இன்றைய எபிசோட்டில் நடப்பதை வைத்து அடுத்து நடக்கப்போவதை ஓரளவு கணிக்கமுடியும் போல் உள்ளது. அதாவது இன்றைய எபிசோடில் வெண்பா வீட்டுக்கு ஒரு புது வருகையாக ஜோசியர் ஒருவர் வருகிறார். அவர் வெண்பாவை பார்த்து கல்யாண கலைக்கூடி வந்துடுச்சு, நீ நினைச்சது நடக்கப்போகுது என சொல்ல சாந்தி அப்போ அம்மா அவங்க ஆசைப்படுற பாரதியை கல்யாணம் பண்ணிப்பாங்களா என கேட்கிறார்.

“விஜய் டெலிவிஷன் அவார்ட்” நிகழ்ச்சியில் சிறந்த சீரியல் விருது பெற்ற பாக்கியலட்சுமி – ரசிகர்கள் வாழ்த்து மழை!

அதற்க்கு அந்த ஜோதிடர் அதெல்லாம் எனக்கு தெரியாது ஆனால் இவர்களை விரும்பி ஏற்றுக் கொள்ள போகிற ஒருவர் தான் வாழ்க்கை துணையாக வருவார் என்று சொல்கிறார். ராகு கேது பெயர்ச்சியால் இவங்க வாழ்க்கையே மாறப் போகுது. இது வரைக்கும் எல்லாரையும் ஆட்டி வெச்ச இவங்கள இனி எல்லோரும் ஆட்டி வைப்பாங்க. வாழ்க்கை அப்படியே தலைகீழாக மாறும் என கூறுகிறார். இதை கேட்ட வெண்பா ஆத்திரத்தில் செம்மயா திட்டி வெளியே அனுப்புகிறார் அந்த ஜோசியரை. இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here