“விஜய் டெலிவிஷன் அவார்ட்” நிகழ்ச்சியில் சிறந்த சீரியல் விருது பெற்ற பாக்கியலட்சுமி – ரசிகர்கள் வாழ்த்து மழை!

0
"விஜய் டெலிவிஷன் அவார்ட்" நிகழ்ச்சியில் சிறந்த சீரியல் விருது பெற்ற பாக்கியலட்சுமி - ரசிகர்கள் வாழ்த்து மழை!
“விஜய் டெலிவிஷன் அவார்ட்” நிகழ்ச்சியில் சிறந்த சீரியல் விருது பெற்ற பாக்கியலட்சுமி – ரசிகர்கள் வாழ்த்து மழை!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் மக்களின் மனம் கவர்ந்த சிறந்த சீரியலுக்கு “விஜய் டெலிவிஷன் அவார்ட்” கொடுக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு சிறந்த சீரியல் என்ற விருதை பாக்கியலட்சுமி சீரியல் வாங்கி இருக்கிறது.

பெஸ்ட் சீரியல் விருது:

விஜய் டிவி ரசிகர்களுக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அந்த வகையில் புதுவிதமான கன்டென்ட் உடன் நிகழ்ச்சிகளும் சீரியல்களும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் ஆண்டுதோறும் விஜய் டிவி நிகழ்ச்சிகளை ஊக்குவிக்கும் விதமாக சிறந்த கலைஞர்களுக்கு விருது வழங்கப்படும். சென்ற ஆண்டு பல விருதுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டிற்கான சிறந்த விருதுகள் பட்டியலுக்கு பல சீரியல்கள் போட்டி போட்டன. இந்நிலையில் விருது நிகழ்ச்சி நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது.

தியேட்டரில் வெளியாகும் எழில் படம், வருத்தப்படும் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

அதில் பல விஜய் டிவி நட்சத்திரங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ரசிகர்கள் தங்களுக்கு விருப்பமான கதாபாத்திரங்களுக்கு விருது கிடைக்க வேண்டும் என ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். இந்நிலையில் அது குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் சிறந்த சீரியல் என்ற விருதை பாக்கியலட்சுமி சீரியல் பெற்றுள்ளது. அதனால் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

Favourite On screen Pair விருதை தமிழும் சரஸ்வதியும் சிரியல் ஜோடி நக்‌ஷத்ரா மற்றும் தீபக் பிடித்துள்ளார். மேலும் பெஸ்ட் குடும்பம் விருது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு கிடைத்து இருக்கிறது. சிறந்த ஹீரோ விருது பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர் கதாபாத்திரத்திற்கு கிடைத்துள்ளது. மேலும் சிறந்த அப்பா உள்ளிட்ட பல விருதுகள் பாக்கியலட்சுமி சீரியலுக்கு கிடைத்துள்ளது. அதனால் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!