புது காரில் குழந்தை உடன் பயணித்த ஆலியா, சஞ்சீவ் ஜோடி – ரசிகர்கள் வாழ்த்து! வைரலாகும் வீடியோ!

0
புது காரில் குழந்தை உடன் பயணித்த ஆலியா, சஞ்சீவ் ஜோடி - ரசிகர்கள் வாழ்த்து! வைரலாகும் வீடியோ!
புது காரில் குழந்தை உடன் பயணித்த ஆலியா, சஞ்சீவ் ஜோடி - ரசிகர்கள் வாழ்த்து! வைரலாகும் வீடியோ!
புது காரில் குழந்தை உடன் பயணித்த ஆலியா, சஞ்சீவ் ஜோடி – ரசிகர்கள் வாழ்த்து! வைரலாகும் வீடியோ!

தமிழ் சின்னத்திரையில் சிறந்த ஜோடியாக கலக்கி வரும் நடிகை ஆலியா மானசா, சஞ்சீவ் ஜோடி தங்களுக்கு குழந்தை பிறக்க இருக்கும் சந்தோசத்தை கொண்டாடும் வகையில் புதிதாக கருப்பு நிற பென்ஸ் கார் வாங்கி இருக்கிறார். அதில் தனது மூத்த மகளுடன் முதன்முறையாக ரைட் சென்று இருக்கிறார்.

ஆலியா மானசா சஞ்சீவ்:

தமிழ் சின்னத்திரையில் ராஜா ராணி தொடரில் இணைந்து நடித்த சஞ்சீவ்- ஆல்யா மானசா ஜோடி, காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் இவர்களின் காதலுக்கு அர்த்தமாக ஐலா என்ற மகள் இருக்கிறார். தன்னுடைய மகள் பிறந்து சில மாதங்களில் ஆலியா சீரியலில் ரீஎன்ட்ரி கொடுத்தார். விஜய் டிவியில் ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வந்த நிலையில் சீரியலில் அவர் இரண்டாவது முறை கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். இந்நிலையில் 9 மாதம் வரை சீரியலில் அவர் நடித்தார்.

முல்லைக்கு குழந்தை பிறக்க பரிகாரம் சொன்ன கஸ்தூரி, கடையில் புறக்கணிக்கப்படும் ஜீவா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

அதன் பின் பிரசவத்திற்கு சில வாரங்கள் முன்னதாக அவர் சீரியலை விட்டு விலகினார். இந்நிலையில் அவருக்கு சில நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. தனது மூத்த மகள் பிறந்த போது அவருக்கு வெள்ளை நிற பென்ஸ் பரிசளித்த சஞ்சீவ் தனது மகன் பிறந்துள்ள நிலையில் என்ன பரிசு கொடுக்க இருக்கிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். இந்நிலையில் தற்போது கருப்பு நிற பென்ஸ் வாங்கி இருக்கின்றனர். அது குறித்த வீடியோ ஒன்றை தனது யூடுயூப் சேனலில் வெளியிட்டு இருக்கின்றனர்.

தனக்கே தெரியாமல் கர்ப்பமான முல்லை, மகிழ்ச்சியில் குடும்பத்தினர் – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்து வருபவை!

இந்நிலையில் ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றனர். மேலும் அவர்களது மகனை புது காரில் வரவேற்று இருக்கின்றனர். அவர்களது ரசிகர்கள் ஆலியா சஞ்சீவ் நடிப்பிற்கு மட்டுமல்லாமல் அவர்களது கார் கலெக்சனிற்கும் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த ஜோடி சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாக இருக்கின்றனர். மேலும் அவர்களுக்கு பிறந்த பையனுக்கு அர்ஷ் என பெயர் வைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here