விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் நடிக்கும் கோபி யார் தெரியுமா? லீக்கான சுவாரசியமான தகவல்கள்!

0
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியலில் நடிக்கும் கோபி யார் தெரியுமா? லீக்கான சுவாரசியமான தகவல்கள்!
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியலில் நடிக்கும் கோபி யார் தெரியுமா? லீக்கான சுவாரசியமான தகவல்கள்!
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் நடிக்கும் கோபி யார் தெரியுமா? லீக்கான சுவாரசியமான தகவல்கள்!

பாக்கியலட்சுமி சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்து வரும் கோபி குறித்தான பல சுவாரசியமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. கோபி இத்தனை திரைப்படங்களில் நடித்துள்ளாரா என ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பாக்கியலட்சுமி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. டிஆர்பியிலும் பாக்கியலட்சுமி தொடர் தான் முன்னிலையில் இருந்து வருகிறது. பெரும்பாலான ரசிகர்களும் கோபியின் நடிப்பை தான் பாராட்டி பேசி கொண்டிருக்கின்றனர். இவரது நடிப்பிற்கு ஆஸ்கார் விருதே வழங்கலாம் போல. கோபியின் கதாபாத்திரத்தில் வேறு எவராவது நடித்திருந்தால் பாக்கியலட்சுமி சீரியல் இந்த அளவுக்கு ரீச் ஆகியிருக்குமா என்பது சந்தேகமே. பாக்கியாயிடம் எப்போது கோபி மாட்டி கொள்வார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

பாக்கியாவை படத்திற்கு கூப்பிடும் எழில், கோபியை வர வேண்டாம் என எச்சரிக்கை – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்த வாரம்!

தற்போது பாக்கியலட்சுமி கோபி குறித்தான சுவாரசியமான பல தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது கோபியின் உண்மையான பெயர் சதிஷ். பாக்கியலட்சுமி சீரியலில் அறிமுகமாவதற்கு முன்பாகவே பல சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். முதன் முதலில் மின்சார பூவே என்கிற திரைப்படத்தின் மூலமாக தான் கதாநாயகனாக அறிமுகமானார். இதற்கு பிறகு ராமானுஜத்தின் வாழ்க்கை வரலாறு, எம்.ஜி.ஆர் ன் வாழ்க்கை வரலாறு திரைப்படம் முதலான வரலாற்று திரைப்படங்களில் நடித்தார். ராமானுஜத்தின் வாழ்க்கை வரலாறு தான் இவருக்கு பேரையும் புகழையும் கொடுத்தது.

திடீரென மயங்கி விழுந்த ‘நாம் தமிழர்’ சீமான் – தொண்டர்கள் அதிர்ச்சி! நடந்தது என்ன?

இந்த திரைப்படங்களை தொடர்ந்து இருமுகன் மற்றும் தனிஒருவன் திரைப்படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கிறார். இதற்கு பிறகு தான் சின்னத்திரையில் அறிமுகமானார். மந்திரவாசல் சீரியல் மூலமாக அறிமுகமான சதிஷ் அடுத்தடுத்து சூலம், ஆனந்தம், கல்யாண பரிசு, மகாராணி முதலான சீரியல்களில் நடித்தார். இந்த சீரியலுக்கு பிறகு தான் கோபிக்கு பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவரது முகபாவனைகள் அனைவரும் ரசிக்கும்படியாக இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!