திடீரென மயங்கி விழுந்த ‘நாம் தமிழர்’ சீமான் – தொண்டர்கள் அதிர்ச்சி! நடந்தது என்ன?

0
திடீரென மயங்கி விழுந்த 'நாம் தமிழர்' சீமான் - தொண்டர்கள் அதிர்ச்சி! நடந்தது என்ன?
திடீரென மயங்கி விழுந்த 'நாம் தமிழர்' சீமான் - தொண்டர்கள் அதிர்ச்சி! நடந்தது என்ன?
திடீரென மயங்கி விழுந்த ‘நாம் தமிழர்’ சீமான் – தொண்டர்கள் அதிர்ச்சி! நடந்தது என்ன?

சென்னை திருவொற்றியூரில் போராட்டம் நடத்தச் சென்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்து சிகிச்சை கொடுக்கப்பட்டு அவர் நலமுடன் வீடு திரும்பி இருக்கிறார்.

திடீர் மயக்கம்:

தமிழ் திரைத்துறையில் முதலில் இயக்குனராக களமிறங்கிய சீமான் அதன் பின் அரசியலில் தன்னுடைய முழு பங்களிப்பையும் கொடுக்க தொடங்கினார். இலங்கை தமிழர்கள் மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் உரிமைகளுக்காக பிரச்சாரகராக அறியப்படும் சீமான், 1958ல் ஆதித்தனாரால் உருவாக்கப்பட்ட நாம் தமிழர் இயக்கத்தை 18 மே 2010ல் நாம் தமிழர் கட்சியாக மாற்றினார். அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் சீமான், மற்ற முக்கிய அரசியல் கட்சிகளில் இருந்து வேறுபட்டு மாற்று அரசியலை வழங்கும் கட்சியாக இது இருக்கும் என தெரிவித்துள்ளார்.

“பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பாதுகாப்பே இல்லை” – நடிகர் தாடி பாலாஜி ஓபன் டாக்!

இந்நிலையில் திருவொற்றியூர், அண்ணாமலை நகர் ரயில்வே கேட் பகுதியில் பாலம் அமைப்பதற்காக, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு வாழ்ந்து வரும் மக்களுக்கு மாற்று இடம் கூட வழங்காமல் அவர்களது குடியிருப்புகளை இடித்து அகற்றப்பட்டு வருகின்றனர். அதனால் அதற்கு கண்டிப்பு தெரிவித்தும், பாதிக்கப்படும் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, அவர்களுக்கு உடனடியாக வீடுகளுடன் கூடிய மாற்று வசிப்பிடங்கள் வழங்க வலியுறுத்தவும் நாம் தமிழக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று பார்வையிட்டார்.

IPL 2022 லீக்: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 11வது போட்டிக்கான பிளேயிங் 11 அணி!

அப்போது வெயில் அதிகமாக இருந்த நிலையில் அதை தங்க முடியாமல் இருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தார் சீமான். நம்பிக்கையோடு இருங்கள். வீடுகளை இடித்துவிடுவார்கள் என்று பயப்பட வேண்டாம். கவலைப்படாமல் நம்பிக்கையோடு இருங்கள் என்று கூறினார். எந்த கட்டிடம் இடித்தாலும் நாம் வந்து போராடுவோம் என்று கூறினார். ஓட்டுரிமை, குடிநீர், மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் திடீரென ஆக்கிரமிப்பு என்று கூறி இடிக்க வருவது ஏற்றுக்கொள்ள முடியாது என பேசிக் கொண்டிருக்கும் போதே அவர் மயங்கி விழுந்தார். அதனால் நாம் தமிழர் கட்சித் தொண்டர்களும் செய்தியாளர்களும் பதற்றமடைந்தனர். உடனடியாக சீமானுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு நலமுடன் வீடு திரும்பி இருக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!