விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் ரித்திகா வெளியிட்ட வீடியோ – நிலா பாப்பா ரசிகர்கள் குஷி!

0
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியல் ரித்திகா வெளியிட்ட வீடியோ - நிலா பாப்பா ரசிகர்கள் குஷி!
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியல் ரித்திகா வெளியிட்ட வீடியோ - நிலா பாப்பா ரசிகர்கள் குஷி!
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் ரித்திகா வெளியிட்ட வீடியோ – நிலா பாப்பா ரசிகர்கள் குஷி!

பாக்கியலட்சுமி சீரியல் ஷூட்டிங்கின் போது ரித்திகா, நிலா பாப்பாவுடன் சிரித்து விளையாடும் படியான வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மூலமாகவே சீரியல்களில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் பிரபலமாகி விடுகின்றனர். அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியல் மூலமாக பிரபலமானவர் தான் ரித்திகா. பாக்கியலட்சுமி தொடரில் விதவை கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார். அதாவது திருமணமான புதிதிலேயே ரித்திகா கணவனை இழந்துவிடுகிறார். தற்போது ரித்திகாவிற்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. குழந்தையுடன் ரித்திகா மாமனார், மாமியாரை கவனித்து கொண்டு மாமியார் வீட்டில் தங்கி படித்து கொண்டிருக்கிறார்.

‘கோபியிடம் மன்னிப்பு கேட்டால் தான் பேசுவேன்’ – எழிலிடம் சண்டையிட்ட பாக்கியா! சீரியலில் அடுத்த திருப்பம்!

ரித்திகா விதவை என்பது தெரியாமல் ரித்திகாவை பார்த்ததுமே எழிலுக்கு காதல் வந்துவிடுகிறது. அதன் பின்பு ரித்திகா விதவை என்பதும் அவருக்கு ஒரு குழந்தையும் இருப்பது தெரியவருகிறது. ஆனாலும், ரித்திகாவை எழில் காதலித்து வருகிறார். ரித்திகாவிற்கு பாக்கியலட்சுமி தொடரில் அவ்வளாக முக்கியத்துவம் இல்லாவிட்டாலும் எக்கச்சக்கமான ரசிகர்கள் இருக்கிறார்கள். சமூக வலை பக்கங்களிலும் ரித்திகா ரசிகர்களுடன் தொடர்பிலே இருந்து வருகிறார்.

பாரதியை திருமணம் செய்து கொள்ளுமாறு கண்ணம்மாவிடம் கெஞ்சும் லட்சுமி – ப்ரோமோ ரிலீஸ்!

தற்போது ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதாவது ரித்திகா ஷூட்டிங்கில் நடித்து கொண்டிருக்கிறார். அப்போது ரித்திகா ஷூட்டிங்கில் இருப்பது தெரியாமல் நிலா பாப்பா ஓடி வந்து அம்மா அம்மா என சொல்கிறார். உடனே ரித்திகா நான் மறுபடியும் ஒன்மோர் போகனும் தெரியுமா என கூறுகிறார். அதற்கு நிலா பாப்பா சிரித்தபடி ஓடும்படியான வீடியோவை பதிவு செய்துள்ளார். தற்போது ரசிகர்கள் பலரும் அந்த வீடியோவிற்கு சோ கியூட் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!