
பாக்கியாவிற்காக கோபியுடன் சண்டை போடும் ஜெனி, கோவத்தில் செழியன் – புதிய திருப்பங்கள்!
கோபி வீட்டை விட்டு சென்றதில் இருந்து செழியன், இனியா மற்றும் ஈஸ்வரி மூவரும் போட்டி போட்டு கொண்டு பாக்கியாவை திட்டி கொண்டிருக்கின்றனர். இதனால், ஜெனி பாக்கியாவிற்காக கோபியுடன் சண்டைபோடும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல் ட்விஸ்ட்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் விவாகரத்து வாங்கி விட்டு பாக்கியா கோபியை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுகிறார். கோபியை வெளியே அனுப்பியதால் பாக்கியா மீது மொத்த குடும்பமும் கொலை வெறியில் இருக்கின்றனர். அதாவது, கோபியை மன்னித்து நல்வழிப்படுத்த வேண்டும் என்பது போல செழியன், இனியா மற்றும் ஈஸ்வரி நடந்து கொள்கின்றனர். ஆனால், பாக்கியா தற்போது கூட குடும்பத்திற்காக உயிர் வாழ வேண்டும், உழைக்க வேண்டும் என நினைத்து கொண்டிருக்கிறார்.
ஆனால், பாக்கியாவின் நிலைமையை புரிந்துகொள்ளாமல் ஈஸ்வரி, செழியன் மற்றும் இனியா மூவரும் பாக்கியாவை வாய்க்கு வந்தபடி பேசி கொண்டிருக்கின்றனர். இது மட்டுமல்லாமல் கோபியாக இருந்தால் சரியான நேரத்தில் ஸ்கூல் பீஸ் கட்டியிருப்பார், பாக்கியா தற்போது வரைக்கும் கட்டவில்லை என்கிற ஒரு காரணத்தை பிடித்துக்கொண்டு கோபி இல்லாமல் மிகவும் கஷ்டப்படுவதாக நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால், பாக்கியா எதற்காக இந்த முடிவு எடுத்திருக்கிறார் என்பதை ராமமூர்த்தி தாத்தா, எழில் மற்றும் ஜெனி மட்டும் தான் புரிந்து கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் காவலர்களின் வாரிசுகளுக்கு வேலை – 912 பேருக்கு பணி ஆணை!
ஆனாலும், எதுவும் செய்யமுடியாமல் மூவரும் அமைதியாக நின்று கொண்டிருக்கின்றனர். இதனிடையே, ஜெனியும் செழியனிடம் ஸ்கூல் பீஸ் கட்டுமாறு கேட்டார். ஆனால், செழியன் அம்மா தானே குடும்பத்தை என்னால் சாமளித்துக்கொள்ள முடியும் என அப்பாவிடம் சவால் விட்டார்கள், தற்போது அம்மாவே இனியாவிற்கு ஸ்கூல் பீஸ் கட்டட்டும் என்னால் ஒரு பைசா கூட தர முடியாது என கூறி விடுகிறார். பின்னர், ஜெனி மனசு கேட்காமல் கோபியால் தானே பாக்கியா ஆண்டிக்கு இவ்வளவு பிரச்சனை என கோபியிடம் நியாயம் கேட்க செல்லும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்