மனம் நொந்து போய் “பாக்கியலட்சுமி” சதீஸ் வெளியிட்ட வீடியோ – இணையத்தில் வைரல்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் கொடூர வில்லனாக கலக்கி வரும் நடிகர் சதீஸ், சமூக வலைத்தளங்களில் இருந்தால் கோபியை திட்டி மெசேஜ் வருவதாக விரக்தியில் வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோ தற்போது ட்ரெண்டாகி இருக்கிறது.
பாக்கியலட்சுமி சீரியல்:
தற்போது டாப் வரிசையில் இருக்கும் பிரபலமான சீரியலாக பாக்கியலட்சுமி இருக்கிறது. இந்த சீரியலில் முக்கிய கதாபத்திரமான கோபியாக நடிகர் சதீஸ் நடிக்கிறார். கொடூரமான வில்லனாக நடித்து வரும் அவருக்கு விஜய் டெலிவிஷன் அவார்ட் நிகழ்ச்சியில் கூட சிறந்த வில்லன் விருது கொடுக்கப்பட்டது. தமிழக மக்கள் பலர் கோபி எப்போது சிக்குவார் என ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அந்த அளவிற்கு இது வெறும் சீரியல் தான் என நினைக்காமல் குடும்பத்தில் ஒருவராக மக்கள் நினைக்கின்றனர்.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் கோபியாக நடித்து வரும் சதீஸ் அவர்களின் நடிப்பை மட்டும் பார்க்காமல் பலர் அவரை தேடி சென்று திட்டுகின்றனர். கோபி எப்படி குடும்பத்தை ஏமாற்றலாம் என பல சாபங்களை கொடுக்கின்றனர். ஆனால் அது குறித்து நடிகர் சதீஸ் கண்டுகொள்ளாமல் இருந்தாலும் அவரால் பொறுத்துக் கொள்ள முடியாத பல கமெண்ட்கள் வருகிறது. அதனால் நடிகர் சதீஸ் சில நாட்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகினார். தற்போது புதிய அக்கவுண்டில் அவர் என்ட்ரி கொடுத்தார்.
விஜே சித்ராவுக்கு ஹேம்நாத்துடன் திருமணம் நடக்கவில்லை? போலீஸ் அதிகாரியின் ஷாக் ரிப்போர்ட்!
அதன் பின் பல வீடியோக்களை அவர் பதிவிட்டார். ஆனால் தற்போது மகா சங்கமத்தில் கோபியின் அட்டகாசம் அளவில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. அதனால் கடுப்பான ரசிகர்கள் கோபி அக்கவுண்ட்டை தேடி சென்று பயங்கரமான திட்டி இருக்கின்றனர். அதனால் மனம் விரக்தி அடைந்த நடிகர் சதீஸ், நீங்க நான் நன்றாக நடித்தாலும் திட்டுகிறீர்கள், இல்லையென்றாலும் திட்டுகிறீர்கள் என என்னை சதீஸ் என பார்க்காமல் இருக்கீங்க என மனம் வருந்தி பேசி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது ட்ரெண்டாகி இருக்கிறது.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்