முதன்முறையாக தனது தம்பியை பார்த்த ஐலா பாப்பா – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!

0
முதன்முறையாக தனது தம்பியை பார்த்த ஐலா பாப்பா - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!
முதன்முறையாக தனது தம்பியை பார்த்த ஐலா பாப்பா - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!
முதன்முறையாக தனது தம்பியை பார்த்த ஐலா பாப்பா – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!

சின்னத்திரையில் நட்சத்திர ஜோடியாக சஞ்சீவ் ஆலியாவிற்கு சில நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில் பிரசவம் ஆன நாள் அன்று நடந்த சம்பவம் பற்றி அவர்கள் வீடியோவாக பதிவிட்டு இருக்கின்றனர்.

சஞ்சீவ் ஆலியா:

விஜய் டிவி ராஜா ராணி சீரியலில் நடித்ததன் மூலமாக பிரபலமானவர்கள் சஞ்சீவ் ஆலியா ஜோடி. இருவரும் காதலித்து வந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஐலா என்ற மகள் இருக்கிறார். திருமணம் முடிந்தும் இருவரும் சீரியல்களில் பிசியாக இருக்கும் நிலையில் ஆலியா இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்தார். தன்னுடைய கர்ப்பகாலத்தின் கடைசி சில வாரங்கள் வரை தொடர்ந்து அவர் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அடுத்த ட்விஸ்டு – முல்லையை பிரியும் கதிர்? ரசிகர்கள் ஷாக்!

இந்நிலையில் அவர்களுக்கு சென்ற வாரம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு அர்ஷ் என பெயர் வைத்துள்ளனர். மேலும் குழந்தை பிறந்த அன்று சஞ்சீவ் தனது குழந்தையை வாங்கும் புகைப்படம் மற்றும் வீடியோ வெளியானது. சமூக வலைத்தளங்களில் பெரிதும் பேசப்பட்ட செய்தியாக இது இருந்தது. ஆலியாவிற்கு இரண்டாவது முறையும் அறுவைசிகிச்சை மூலமாவே குழந்தை பிறந்துள்ளது. மேலும் தனது பிரசவ நாள் அன்று ஆலியா என்ன வெல்லாம் செய்தார் என்பது பற்றி வீடியோ ஒன்றை அவர்களது யூடுப் சேனலில் வெளியிட்டு இருக்கின்றனர்.

அதில் ஆலியா மருத்துவமனைக்கு வந்த நாள் முதல் அவர் வலியால் பட்ட கஷ்டங்கள் ஐலா பாப்பா செய்த சேட்டைகள், சஞ்சீவ் கொடுத்த ஆறுதல், மருத்துவமனையில் சஞ்சீவ் அம்மா கொடுத்த கேர் என அனைத்தும் இந்த வீடியோவில் அழகாக காட்டப்பட்டது. அதுமட்டுமில்லாமல் ஆலியாவை ஆப்ரேசன் செய்ய அழைத்து சென்றது முதல் குழந்தை அழுத சத்தம் வரை காட்டப்பட்டது. ஆனால் அந்த வீடியோவில் குழந்தையின் முகத்தை அவர்கள் காட்டாமல் இருக்கின்றனர். கடைசியாக தம்பியை பார்க்க ஐலா ஓடியதுடன் இந்த வீடியோ முடிவடைந்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here