நயன்தாரா, விக்னேஷ் சிவனின் திருமண தேதியை அறிவித்த நடிகை கீர்த்தி சுரேஷ் – ரசிகர்கள் உற்சாகம்!

0
நயன்தாரா, விக்னேஷ் சிவனின் திருமண தேதியை அறிவித்த நடிகை கீர்த்தி சுரேஷ் - ரசிகர்கள் உற்சாகம்!
நயன்தாரா, விக்னேஷ் சிவனின் திருமண தேதியை அறிவித்த நடிகை கீர்த்தி சுரேஷ் - ரசிகர்கள் உற்சாகம்!
நயன்தாரா, விக்னேஷ் சிவனின் திருமண தேதியை அறிவித்த நடிகை கீர்த்தி சுரேஷ் – ரசிகர்கள் உற்சாகம்!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகை நயன்தாரா பல ஆண்டுகளாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இந்நிலையில் அவர்களின் திருமணம் ஜூன் 9 ஆம் தேதி நடைபெற இருப்பதாக நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

நயன்தாரா விக்கி திருமணம்:

சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்து தமிழில் லேடி சூப்பர் ஸ்டார் என மக்களால் அன்பாக அழைக்கப்படுவர் நடிகை நயன்தாரா. மேலும் முன்னணி நடிகர்களை வைத்து பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். சினிமாவில் பிரபலமான காதல் ஜோடிகளாக இவர்கள் இருக்கின்றனர். அடிக்கடி இருவரையும் ஒரே இடத்தில் பார்க்க முடியும். ஆனால் இப்போது வரை இருவரும் திருமணம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

கோவிலில் அமிர்தாவை பார்த்த கதிர் முல்லை, ராதிகாவை பிறந்தநாளுக்கு அழைத்த பாக்கியா – இன்றைய “மகா சங்கமம்” எபிசோட்!

விக்னேஷ் சிவன் தற்போது விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா சேர்ந்து நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை இயக்கியுள்ளார். அந்த படம் வெளியாகி வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நயன்தாரா தனக்கும், விக்கிக்கும் நிச்சயம் முடிந்து விட்டதாக அது குறித்த மோதிரத்தை காட்டினார். ஆனால் திருமண தேதி பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கீர்த்தி சுரேஷ் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடியிடம் “உங்களின் திருமணம் ஜூன் 9 ஆம் தேதி தானா?” என கேட்டுள்ளார். அதனால் சமூக வலைத்தளங்களில் நயன்தாரா, விக்னேஷ் திருமணம் ஜூன் 9 ஆம் தேதி நடைபெற இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது. அவர்களின் திருமணத்திற்கு திரையுலக நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவர்கள் இது பற்றி எந்த தகவலும் வெளியிடவில்லை.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!