கடுப்பேத்திய கண்ணம்மா, பொருள்களை உடைத்து கதறி அழுத வெண்பா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
கடுப்பேத்திய கண்ணம்மா, பொருள்களை உடைத்து கதறி அழுத வெண்பா
கடுப்பேத்திய கண்ணம்மா, பொருள்களை உடைத்து கதறி அழுத வெண்பா

கடுப்பேத்திய கண்ணம்மா, பொருள்களை உடைத்து கதறி அழுத வெண்பா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் வெண்பா பாரதிக்கு போன் செய்ய அதை கண்ணம்மா எடுத்து பேசுகிறார். நான் என் புருசனுடன் சந்தோசமாக இருக்கிறேன் என வெண்பா வெறுப்பேத்துகிறார். பின் பாரதி கண்ணம்மாவின் விவகாரத்து கேஸ் மீண்டும் விசாரணைக்கு வருவதாக சொல்கிறார். அதை கேட்டு லட்சுமி வருத்தப்படுகிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், வெண்பா பாரதி நம்பருக்கு வீடியோ கால் செய்கிறார். அப்போது பாரதி போன் கண்ணம்மாவிடம் இருக்க கண்ணம்மா போனை எடுக்கிறார். அதை பார்த்து கடுப்பாகி இருக்கிறார். நீ எதற்கு பாரதி போனில் வருகிறாய் என வெண்பா கேட்க, அப்போது கண்ணம்மா என்னுடைய புருஷன் போனில் நான் வருகிறேன் உன்னை போல அடுத்தவன் புருசனுக்கு ஆசைப்படவில்லை என சொல்கிறார். பின் வெண்பா கோவப்பட பாரதி இவ்வளவு நேரம் என்னுடன் தான் பேசிக் கொண்டிருந்தார். இப்போது தான் போனார் என சொல்கிறார். இனிமேல் அவர் பின்னாடி சுத்தாமல் உன் அம்மாவுடன் சேர்ந்து சந்தோசமாக இரு என சொல்கிறார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு? ஃபிட்மென்ட் காரணி அதிகரிப்பு!

வெண்பாவை போனை வைத்துவிட்டு வீட்டில் இருக்கும் பொருள்களை எல்லாம் தூக்கி போட்டு உடைக்கிறார். பின் வெண்பா கதறி அழ கீழே வரை சத்தம் கேட்கிறது. அப்போது சாந்தி சர்மிளாவிடம் வெண்பா அம்மா அழுவதாக சொல்ல ஷர்மிளா நானும் இப்படி தான் அழுவேன் அந்த பழக்கம் அவளிடம் அப்படியே இருக்கிறது என நினைக்கிறார் . ஒரு வேளை பாரதியை நினைத்து அழுகிறாளோ ரொம்ப சந்தோசம் என ஷர்மிளா சொல்கிறார். மறுபக்கம் கண்ணம்மா சௌந்தர்யா குழந்தைகளுடன் சாப்பிடாமல் பாரதி வர காத்துக் கொண்டிருக்கிறார்.

Exams Daily Mobile App Download

அப்போது பாரதி வர குழந்தைகள் சந்தோசப்படுகின்றனர். அப்போது பாரதி சாப்பிட அமர எல்லாம் நன்றாக இருப்பதாக குழந்தைகள் சாப்பிடுகின்றனர். சாப்பாடு நன்றாக இருக்கிறது என சௌந்தர்யா சொல்ல இது மருத்துவமனையா இல்லை ஹோட்டலா என தெரியவில்லை என்று பாரதி சொல்கிறார். பின் அனைவரும் சாப்பிட ஹேமா பாரதிக்கு ஊட்டி விடுகிறார். அதை பார்த்து கண்ணம்மா சந்தோசப்பட அனைவரும் கை கழுவ கிளம்பிவிடுகின்றனர். அப்போது கண்ணம்மாவும் பாரதியும் இருக்கின்றனர். பாரதியிடம் கண்ணம்மா காலையில் அந்த பெண்ணின் கணவருடன் சந்தேகம் பற்றி பேசியது நன்றாக இருந்ததாக சொல்ல பாரதி அதை உன்னுடைய விஷயத்துடன் சம்மதப்படுத்துகிறாய் என கேட்கிறார்.

பின் பாரதி விவாகரத்து கேஸ் விசாரணைக்கு வருகிறது. அதில் கண்டிப்பாக விவாகரத்து கிடைத்துவிடும் என பாரதி சொல்ல அதை லட்சுமி கேட்டு அதிர்ச்சி அடைகிறார்அம்மாவும் அப்பாவும் சேர்ந்து விடுவார்கள் என நினைத்தால் இப்போது விவாகரத்து கிடைத்துவிடும் என பேசிக் கொள்கிறார்கள் என நினைக்கிறார். கண்ணம்மா பாரதி சொன்னதை நினைத்து வருத்தப்படுகிறார். மறுபக்கம் வெண்பா கதறி அழ ஷர்மிளா அவரை வந்து பார்க்கிறார். பாரதியை நினைத்து அழுகிறாயா நல்லா அழு அவனை இதோட முடித்து விடு என அறிவுரை சொல்ல வெண்பாவால் அதை எல்லாம் தாங்கி கொள்ளாமல் கதறி அழுகிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here