மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு? ஃபிட்மென்ட் காரணி அதிகரிப்பு!

0

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு? ஃபிட்மென்ட் காரணி அதிகரிப்பு!

நீண்ட நாட்களாக ஃபிட்மென்ட் காரணி உயர்வு குறித்த கோரிக்கைகளை வைத்து வரும் மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் நல்ல செய்தி கிடைக்கலாம் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. இதன் மூலம் அரசு ஊழியர்களின் சம்பளம் உயர வாய்ப்புள்ளது.

ஃபிட்மென்ட் காரணி

சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (DA and DR) தொகையை அரசு 34% ஆக உயர்த்தி அறிவித்தது. இந்த அறிவிப்பின் மூலம் லட்சக்கணக்கான ஊழியர்கள் பலனடைய இருக்கின்றனர். இப்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான DA அறிவிப்புடன், அவர்களின் வாடகை கொடுப்பனவு, PF ஆகியவற்றில் பெரும் உயர்வு இருப்பதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான ஃபிட்மென்ட் காரணியில் உயர்வு ஏற்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

மத்திய அரசின் பென்ஷன் திட்டத்தில் கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

அதாவது, மத்திய அரசு ஊழியர்கள், சம்பள உயர்வுக்கான ஃபிட்மென்ட் காரணியை உயர்த்த வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையில், ஃபிட்மென்ட் காரணி குறைய வாய்ப்புள்ளது என்று சில தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. அந்த வகையில், ஃபிட்மென்ட் காரணியை இன்னும் அதிகரிக்க மத்திய அரசு திட்டமிடவில்லை என்றும் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கையை அரசாங்கம் இது வரை வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்போது பிட்மென்ட் காரணி அதிகரிக்கப்பட்டால், 7வது ஊதியக் குழுவின் கீழ் மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம் அல்லது குறைந்தபட்ச ஊதியமும் கணிசமாக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக வெளிவந்த சில ஊடக அறிக்கைகளின்படி, ஊழியர்கள், ஃபிட்மென்ட் பேக்டரை 2.57 மடங்கில் இருந்து 3.68 மடங்காக உயர்த்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். அந்த வகையில் குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.18,000 லிருந்து ரூ.26,000 ஆக உயர்த்துமாறு ஊழியர் சங்கங்கள் கேட்டுக்கொண்டிருப்பதால், மத்திய அரசு விரைவில் ஃபிட்மென்ட் காரணியை உயர்த்த ஒப்புக்கொள்ள வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here