BB Ultimate| இந்த வார எலிமினேஷன் பட்டியலில் அபிராமி, சுருதி, வனிதா – ரசிகர்கள் ஷாக்!

0
BB Ultimate| இந்த வார எலிமினேஷன் பட்டியலில் அபிராமி, சுருதி, வனிதா - ரசிகர்கள் ஷாக்!
BB Ultimate| இந்த வார எலிமினேஷன் பட்டியலில் அபிராமி, சுருதி, வனிதா - ரசிகர்கள் ஷாக்!
BB Ultimate| இந்த வார எலிமினேஷன் பட்டியலில் அபிராமி, சுருதி, வனிதா – ரசிகர்கள் ஷாக்!

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வார தொடக்கத்தில் நடத்தப்படும் எலிமினேஷன் ப்ரோசஸ் இன்று நடக்க இருக்கிறது. இதில், பலரும் குறிப்பிட்ட 3 பெயர்களை தான் சொல்வது போல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

எலிமினேஷன் பட்டியல்:

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5 வது சீசன் முடிந்த கையோடு அடுத்த வாரத்தில் இ ருந்து தொடங்கப்பட்ட நிகழ்ச்சி தான் பிக் பாஸ் அல்டிமேட். வருடா வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் கிடைத்த ஆதரவு தான் இந்த புதிய முயற்சிக்கு அடித்தளமாக அமைந்தது. அதிலும், புதுமையாக டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் இந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக கமல் தான் உள்ளார். இந்த நிகழ்ச்சிக்கான விதிமுறைகளில் சிலவை மட்டுமே மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மார்ச் 8 வரை பள்ளி & கல்லூரிகளை சுற்றி தடை உத்தரவு நீட்டிப்பு – மாநகர காவல்துறை அறிவிப்பு!

போட்டியாளர்களின் எண்ணிக்கை, மொத்த நாட்களின் எண்ணிக்கை போன்றவை சற்று வேறுபாடு அடைந்திருக்கிறது. இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5 சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் தான் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். அதிலும், முதல் முறையாக இருப்பதால் ரசிகர்களை அதிகம் இழுக்கும் நோக்கத்தில் அதிக சர்ச்சைகளை ஏற்படுத்திய போட்டியாளர்கள் தான் உள்ளனர். வழக்கமாக திங்கட்கிழமை அன்று எலிமினேஷன் ப்ரோசஸ் நடைபெறும். அதன்படி இன்று எலிமினேஷன் ப்ரோசஸ் நடக்க இருப்பதாக பிக் பாஸ் அறிவிக்கிறார்.

PF கணக்குதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அடிப்படை ஊதியம் அதிகம் பெறுபவர்களுக்கு புதிய ஓய்வூதியம்!

ஒவ்வொருவராக வந்து அபிராமி, சுருதி மற்றும் வனிதாவின் பெயர்களை மாற்றி மாற்றி சொல்கின்றனர். இதற்கான காரணத்தையும் தெரிவிக்கின்றனர். இதன்படி பார்த்தால் அதிக வாக்குகளை வாங்கிய இவர்கள் மூவரில் தான் ஒருவர் இந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற வாய்ப்புகள் இருப்பதாக தெரிகின்றது. இவர்கள் மூவரும் அதிக நாட்கள் வரை நிகழ்ச்சியில் தாக்கு பிடிப்பார்கள் என்று நினைத்து வந்த நிலையில் இவ்வளவு சீக்கிரம் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற இருப்பதாக ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!