சன் டிவி “வானத்தை போலே” சீரியலில் துளசியாக களமிறங்கிய புதிய நடிகை – ப்ரோமோ ரிலீஸ்!
சன் டிவியில் முன்னணி சீரியல்களில் ஒன்றான “வானத்தை போலே” சீரியலில், துளசி கதாபாத்திரம் மாற்றப்பட்ட நிலையில் புதிய நடிகை நடிக்கும் ப்ரோமோ வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
வானத்தை போலவே:
அந்த காலம் முதல் சீரியல் என்றாலே சன் டிவி சீரியல்கள் தான் நியாபகத்திற்கு வரும். அந்த அளவிற்கு பல சீரியல்கள் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது. தற்போது வளர்ந்து வரும் காலத்திற்கு ஏற்றார் போல பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் சன் டிவியில் அண்ணன், தங்கையின் பாசத்தை மையமாக கொண்ட கதை உடன் ஒளிபரப்பாகி வருகிறது வானத்தை போலே சீரியல். இந்த சீரியலில் அண்ணன் கதாபாத்திரத்தில் நடிகர் தமன் குமார் நடித்து வருகிறார்.
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் வீட்டில் நடந்த விசேஷம் – வைரல் வீடியோ! ரசிகர்கள் வாழ்த்து!
மேலும் பாசத்தை காட்டும் தங்கையாக துளசி கதாபாத்திரத்தில் ஸ்வேதா நடித்து வந்தார். இருவரின் அண்ணன்- தங்கை பாசத்திற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் துளசி கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஸ்வேதா சீரியலில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார். அதனால் அவருக்கு பதிலாக துளசி கதாபாத்திரத்தில் மற்றொரு புதுமுக நடிகை நடித்து வருகிறார்.
பாரதி கண்ணம்மா” வில்லி பரீனா குழந்தையின் பெயர் இதுவா? குவியும் வாழ்த்துக்கள்!
தற்போது அவர் நடிக்கும் காட்சிகள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் புதிய கதாபாத்திரம் வரும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. சன் டிவியில் பல சீரியல்களில் கதாபாத்திரங்கள் தொடர்ந்து மாற்றப்பட்டு வரும் நிலையில் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தாலும், சீரியலில் இருக்கும் மாறுபட்ட கதை காரணமாக சீரியல் பார்க்கும் ரசிகர்கள் எண்ணிக்கை குறையாமல் உள்ளது. தற்போது அறிமுகமாகி உள்ள புதிய நடிகையை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என இனி வரும் நாட்களில் பார்க்கலாம்.