விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் வீட்டில் நடந்த விசேஷம் – வைரல் வீடியோ! ரசிகர்கள் வாழ்த்து!

0
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கண்ணன் வீட்டில் நடந்த விசேஷம் - வைரல் வீடியோ! ரசிகர்கள் வாழ்த்து!
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கண்ணன் வீட்டில் நடந்த விசேஷம் - வைரல் வீடியோ! ரசிகர்கள் வாழ்த்து!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் வீட்டில் நடந்த விசேஷம் – வைரல் வீடியோ! ரசிகர்கள் வாழ்த்து!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் சரவண விக்ரம் அவரது குடும்பத்தில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்டு, அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவரை வாழ்த்தி வருகின்றனர்.

சரவண விக்ரம்:

சின்னத்திரை நட்சத்திரங்கள் முக்கால் வாசி பேர் தற்போது யூடுயூப் சேனலை நடத்தி வருகின்றனர். சாதாரண மக்களிடம் சின்னத்திரை நடிகர், நடிகைகளுக்கு அதிக பிரபலம் இருப்பதால் இவர்களின் சேனல் மிக விரைவிலேயே பிரபலமாகி விடுகிறது. பிரபலங்களின் வாழ்க்கை முறை குறித்து அறிந்து கொள்வதற்கு மக்கள் அதிக ஆர்வம் தான் இவர்களின் வெற்றிக்கு காரணமாக அமைகிறது. அந்த வகையில், 10 லட்சம் பாலோவர்ஸ்களை கடந்த பிரபலங்களின் யூடுயூப் சேனல்கள் பல உள்ளது. சமீபத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சரவண விக்ரம் ஒரு சேனலை தொடங்கினார்.

பாரதி கண்ணம்மா” வில்லி பரீனா குழந்தையின் பெயர் இதுவா? குவியும் வாழ்த்துக்கள்!

இவரும், விஜே தீபிகாவும் சேர்ந்து அதில் பல வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோக்கள் அனைத்தும் ரசிகர்களால் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. இவர்கள் இருவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் நண்பர்களாக ஆனார்கள். இந்நிலையில், சரவண விக்ரம் தான் படித்த ஊரான சேலத்திற்கு சென்றுள்ளார். அந்த வீடியோவை தனது சேனலில் வெளியிட்டுள்ளார். அதில் தன் உடன் பிறந்த தங்கையின் வளைகாப்பிற்காக தான் குடும்பத்துடன் அங்கு சென்றுள்ளார். அங்கு உள்ள மஹிந்திரா பொறியியல் கல்லூரியில் தான் படித்ததாக கூறியுள்ளார்.

ரஞ்சித், பிரியா ராமன் தலைமையில் சிறப்பாக முடிந்த பாக்கியாவின் புது இடம் திறப்பு நிகழ்ச்சி – இன்றைய “பாக்கியலட்சுமி”எபிசோட்!

கிட்டத்தட்ட 2 வருடங்கள் கழித்து தான் சேலத்திற்கு சென்றுள்ளதாக கூறினார். அங்கிருந்து ராசிபுரத்திற்கு சென்று விழாவில் கலந்து கொண்டார். அப்போது தனது அனைத்து தம்பி, தங்கையையும் வீடியோவில் அறிமுகப்படுத்தி வைத்தார். இந்த வீடியோ முழுவதும் மிகவும் கலகலப்பாக இருந்தது. இதன் மூலம் தான் அவருக்கு இரண்டு தங்கைகள் உள்ளனர் என்பது தெரிந்தது. தனது அம்மா மற்றும் குடும்பத்தில் உள்ள மற்றவர்களையும் இணைத்து எடுக்கப்பட்ட இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் தற்போது அதிக நபர்களால் பார்க்கப்பட்டு வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சரவணவிக்ரமிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!