பாரதி கண்ணம்மா” வில்லி பரீனா குழந்தையின் பெயர் இதுவா? குவியும் வாழ்த்துக்கள்!

0
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா" வில்லி பரீனா குழந்தையின் பெயர் இதுவா? குவியும் வாழ்த்துக்கள்!
பாரதி கண்ணம்மா” வில்லி பரீனா குழந்தையின் பெயர் இதுவா? குவியும் வாழ்த்துக்கள்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியல் வில்லி வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் பரீனா முதன் முதலாக தனது குழந்தையின் முகத்தை அவருடைய பெயர் வைக்கும் விழாவில் வெளிப்படுத்தி இருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரி கலந்து கொண்டுள்ளார்.

நடிகை பரீனா:

தமிழ் சின்னத்திரையில் முன்னணி சீரியல்களில் ஒன்றான பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை பரீனா. அவர் சீரியல்களில் இதுவரை இல்லாத அளவில் இளம் வில்லியாக மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் கர்ப்பமாக இருந்த பரீனா பிரசவத்திற்கு சில வாரங்கள் இருக்கும் வரை படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அதன் பின் இடைவெளி எடுத்துக் கொண்ட அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

ரஞ்சித், பிரியா ராமன் தலைமையில் சிறப்பாக முடிந்த பாக்கியாவின் புது இடம் திறப்பு நிகழ்ச்சி – இன்றைய “பாக்கியலட்சுமி”எபிசோட்!

சுக பிரசவம் நடக்க வேண்டும் என்பதற்காக பல யோக உடற்பயிற்சிகள் செய்து அவர் வீடியோ வெளியிட்டார். அவை மற்ற பெண்களுக்கு ஊக்குவிப்பதாக இருந்தது. குழந்தை பிறந்த பின் படப்பிடிப்பில் இருந்து ஒரு மாத காலம் ஓய்வில் இருந்த அவர் தனது குழந்தையின் முகத்தை காட்டாமல் இருந்து வந்தார். அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் குழந்தையின் புகைப்படத்தை காட்ட வேண்டும் என தொடர்ந்து அவரது பதிவுகளில் கமெண்ட் செய்து வந்தனர்.

கண்ணம்மாவை நினைத்து வருத்தப்படும் சண்முகம், பழைய நினைவுகளுடன் நெருக்கமாக தூங்கும் தம்பதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

இந்நிலையில் குழந்தை பிறந்து ஒரு மாதம் ஆன நிலையில், இஸ்லாமிய முறைப்படி குழந்தையின் பெயர் சூட்டு விழா ஏற்பாடு செய்துள்ளார். அதில் பல சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். குழந்தைக்கு “Zayn Lara Rahman” என வித்தியாசமான பெயரை வைத்திருக்கிறார். மேலும் தனது குழந்தையின் புகைப்படத்தை ரசிகர்களுக்கு காட்டி இருக்கிறார். அந்த விழாவிற்கு பிக்பாஸ் சீசன் 4 வின்னர் ஆரி கலந்து கொண்டது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. மேலும் அந்த நிகழ்ச்சியில் பாரதி கண்ணம்மா குழந்தை நட்சத்திரங்கள் லிஷா மற்றும் ரக்ஷா கலந்து கொண்டுள்ளனர். பரீனாவின் அழகான குழந்தைக்கு ரசிகர்கள் ஆசிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!