இந்தியாவில் iphone உட்பட அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் USB Type-C சார்ஜர்? முக்கிய தகவல் வெளியீடு!

0
இந்தியாவில் iphone உட்பட அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் USB Type-C சார்ஜர்? முக்கிய தகவல் வெளியீடு!
இந்தியாவில் iphone உட்பட அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் USB Type-C சார்ஜர்? முக்கிய தகவல் வெளியீடு!
இந்தியாவில் iphone உட்பட அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் USB Type-C சார்ஜர்? முக்கிய தகவல் வெளியீடு!

இந்தியாவில் பல சார்ஜர்களின் பயன்பாட்டை நிறுத்துவது மற்றும் மின்கழிவுகளைத் தடுப்பதுடன் நுகர்வோர் மீதான சுமையைக் குறைப்பது போன்ற சாத்தியக்கூறுகளை மதிப்பிடுவதற்கு அரசாங்கம், அனைத்து சாதனங்களுக்கும் ஒரே சார்ஜர் கொள்கையை பின்பற்றுமாறு வலியுறுத்தி வருகிறது. அதற்காக ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் மற்றும் துறை சார்ந்த நிறுவனங்களைச் அரசாங்கம் விரைவில் சந்திக்க உள்ளதாக அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

USB Type-C சார்ஜர்:

இன்றைய காலகட்டத்தில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி விண்ணை முட்டும் அளவிற்கு போய்கொண்டே உள்ளது. மேலும் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஸ்மார்ட் போன், டேப்லெட்டுகள் கட்டாய தேவையாக மாறி வருகிறது. அதாவது கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கால் பல நிறுவனங்கள் முடங்கின, அந்த சமயத்தில் ஏராளமான நிறுவனங்கள் தனது ஊழியர்களை “work from home” பார்க்கும் படி உத்தரவிட்டது. அப்போது ஊழியர்களின் வேலைகளுக்கு உறுதுணையாக இருந்தது ஸ்மார்ட்போன், டேப்லெட்டுகள் தான். மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் ஆன்லைன் வாயிலாக தான் வகுப்புகள், தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகள் உட்பட அனைத்து சாதனங்களுக்கும் ஒரு சார்ஜரை ஏற்றுக்கொள்வதற்கான விருப்பத்தை இந்திய அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.

Exams Daily Mobile App Download

அதாவது ஐரோப்பாவும் இதேபோன்ற கொள்கையை ஏற்றுக் கொண்டது, மேலும் ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகள் உட்பட அனைத்து சாதனங்களுக்கும் ஒரே சார்ஜர் கொள்கையை பின்பற்றுமாறு அனைத்து ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது. இந்தக் கொள்கை ஐரோப்பாவில் 2024 முதல் அமலுக்கு வரும். இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசிக்க இந்திய அரசு ஆகஸ்ட் 17ஆம் தேதி கூட்டத்தை அழைத்துள்ளது. மேலும்”நிறுவனங்கள் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் சேவை செய்ய முடியும் என்றால், இந்தியாவில் ஏன் அதைச் செய்ய முடியாது? ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகள் போன்ற சிறிய மின்னணு சாதனங்களில் பொதுவான சார்ஜர் இருக்க வேண்டும்,” என்று மூத்த நுகர்வோர் விவகார அமைச்சக அதிகாரி PTI யிடம் தெரிவித்தார்.

இந்த மாத இறுதிக்குள் Airtel வாடிக்கையாளர்களுக்கு 5G சேவை? CEO விளக்கம்

தற்போது நிறுவனங்கள் ஒவ்வொரு சாதனத்திற்கும் தனித்தனி சார்ஜர்களை வாங்குவதற்கு பயனர்களை கட்டாயப்படுத்துகிறது. மேலும் டேப்லெட்கள், மொபைல் போன்கள் மற்றும் மடிக்கணினிகளுக்கு தனி சார்ஜர்கள் உள்ளன. அதாவது Android மற்றும் iOS சாதனங்களில் ஒரே சார்ஜர் இருந்தால், மக்கள் தனித்தனியாக சார்ஜர்களைப் வாங்க வேண்டியதில்லை. மேலும் கடந்த ஜூன் 2022 இல், ஐரோப்பிய கவுன்சில், கமிஷன் மற்றும் பாராளுமன்றம் மொபைல் மற்றும் பிற சாதனங்களுக்கு ஒற்றை மொபைல் சார்ஜிங் போர்ட்டை செயல்படுத்த ஒப்புக்கொண்டன.

அதாவது “மொபைல் ஃபோன்கள், டேப்லெட்டுகள், இ-ரீடர்கள், இயர்பட்கள், டிஜிட்டல் கேமராக்கள், ஹெட்ஃபோன்கள் மற்றும் ஹெட்செட்கள், கையடக்க வீடியோ கேம் கன்சோல்கள் மற்றும் வயர்டு கேபிள் மூலம் ரீசார்ஜ் செய்யக்கூடிய போர்ட்டபிள் ஸ்பீக்கர்கள் ஆகியவை அவற்றின் உற்பத்தியாளரைப் பொருட்படுத்தாமல் USB Type-C போர்டு பொருத்தப்பட்டிருக்க வேண்டும். மேலும் மடிக்கணினிகள் நடைமுறைக்கு வந்த 40 மாதங்களுக்குள் தேவைக்கேற்ப மாற்றியமைக்கப்பட வேண்டும்” என்று நாடாளுமன்ற செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here