UPSC CSE 2023 தேர்வு இறுதி முடிவுகள் வெளியீடு? – பதிவிறக்கும் வழிமுறைகள்!

0
UPSC CSE 2023 தேர்வு இறுதி முடிவுகள் வெளியீடு? - பதிவிறக்கும் வழிமுறைகள்!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் CSE தேர்வுகளுக்கான இறுதி முடிவை விரைவில் வெளியிட உள்ளது. UPSC CSE 2023 தேர்வுமுடிவுகளை பதிவிறக்கம் செய்வது குறித்து நாம் இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

UPSC CSE 2023:

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான 2023 ஆம் ஆண்டில் 1105 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிட்டது. தேர்வின் மூலம் இந்திய நிர்வாக சேவை, இந்திய வெளியுறவு சேவை, இந்திய காவல் சேவை மற்றும் பிற மத்திய சேவைகள் பதவிகளுக்கான ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். மூன்று நிலைகளில் நடத்தப்படும் 2023 யுபிஎஸ்சி சி எஸ் இ தேர்வுக்கு பிரிலிம்ஸ் மே 28ஆம் தேதி அன்று நடத்தப்பட்டு, அதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மெயின்ஸ் தேர்வு செப்டம்பர் 15, 2023 அன்று முதல் ஐந்து நாட்களுக்கு நடத்தப்பட்டது.

மெயின்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2024 ஜனவரி 4 முதல் ஏப்ரல் 9ம் தேதி வரை நேர்காணல் நடத்தப்பட்டது. இந்நிலையில் யுபிஎஸ்சி தேர்வு ஆணையம் சி எஸ் சி தேர்வு முடிவை விரைவில் வெளியிட உள்ளது.

வந்தாச்சு கோடை விடுமுறை.. கூடுதல் சிறப்பு ரயில் இயக்கம் – ரயில்வேயின் சூப்பர் அப்டேட்!

தேர்வு முடிவை பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:

  • முதலில் யுபிஎஸ்சி அதிகாரப்பூர்வ வலைதள பதிவிறக்கம் பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
  • அதில் சிவில் சர்வீஸ் தேர்வு 2023 இறுதி முடிவுகள் என்ற இணைப்பை கிளிக் செய்து அதில் தோன்றும் pdf திரையில் விபரங்கள் வெளியிடப்பட்டிருக்கும்.
  • சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர்கள் இவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
  • பி டி எஃப் ஐ பதிவிறக்கம் செய்து அதனை பிரிண்ட் அவுட் எடுத்து முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும்.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!