அட இது நம்ம லிஸ்ட்லேயே இல்லயே பா.. WhatsApp-இல் யாரும் எதிர்பார்க்காத கலக்கல் அப்டேட்!

0
அட இது நம்ம லிஸ்ட்லேயே இல்லயே பா.. WhatsApp-இல் யாரும் எதிர்பார்க்காத கலக்கல் அப்டேட்!
அட இது நம்ம லிஸ்ட்லேயே இல்லயே பா.. WhatsApp-இல் யாரும் எதிர்பார்க்காத கலக்கல் அப்டேட்!
அட இது நம்ம லிஸ்ட்லேயே இல்லயே பா.. WhatsApp-இல் யாரும் எதிர்பார்க்காத கலக்கல் அப்டேட்!

வாட்ஸ்அப் செயலியானது உலகம் முழுவதும் உள்ள அதிகமாக மக்களால் செய்திகளை பகிர்ந்து கொள்வதற்கு பயன்படுத்தப்படும் முக்கிய செயலியாகும். இந்த செயலியில் அடிக்கடி புதிய அப்டேட்கள் பயனர்களின் வசதிக்காக அறிமுகம் செய்யப்படுகிறது.

வாட்ஸ்அப் அப்டேட்:

வாட்ஸ்அப் செயலி ஆரம்ப காலத்தில் அதிக அளவில் பயனர்களின் வரவேற்புகளை பெறவில்லை. இதனால் மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப் செயலியின் நிர்வாகம் பயனர்களை தங்கள் வசம் இழுக்க போட்டி போட்டுக் கொண்டு புதிய பல அப்டேட்களை வழங்கியது. இதனால் வாட்ஸ்அப் பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. தற்போது சமீபத்தில் கூட, பயனர்கள் தங்களின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை பார்ப்பவர்களின் விருப்பங்களை தேர்வு செய்வதை போலவே, தங்களின் ஆன்லைன் நிலையை பார்ப்பவர்களின் பட்டியலையும் தேர்வு செய்து கொள்ளும் அம்சத்தை கொண்டு வந்தது.

மேலும், சாட்களில் குறிப்பிட்ட பதிலுக்கு எமோஜிகளின் மூலம் ரியாக்சன்களை அனுப்புவதும் கொண்டு வரப்பட்டது. தற்போது பயனர்களுக்கு புதிய அப்டேட்க்கான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இனி வாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் குழுவில் உள்ள மற்ற உறுப்பினர்களுடன் கருத்துக் கணிப்புகளை நடத்த முடியும். இந்த கருத்துக்கணிப்பில் மொத்தம் 12 விருப்பங்கள் வரை சேர்க்க முடியும் என்றும், ஆனால், முழுவதுமாக வடிவமைக்கப்பட்டு இறுதியாக இந்த அம்சம் பயன்பாட்டிற்கு வரும் போது அதன் எண்ணிக்கையில் மாறுபாடுகள் இருக்கலாம் என்றும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN TRB தேர்வர்கள் கவனத்திற்கு – இனி உங்களுக்கு அந்த கவலையே இல்ல – வரவிருக்கும் முக்கிய மாற்றம்!

Exams Daily Mobile App Download

ஆனால், உருவாக்கத்தில் உள்ள இந்த அம்சம் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது. அறிக்கையின்படி, வழக்கமான சாட் பகுதியில் இதற்கான வசதிகள் இருக்கும் என்றும், இது Android 2.22.10.11 க்கான WhatsApp பீட்டாவின் அப்டேட்டில் இதனை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஐபோன் பயனர்கள் தங்கள் செயலியில் புதிய கேமரா ஷார்ட்கட்டைச் சேர்க்கும் அம்சத்தில் வாட்ஸ்அப் செயல்படும் என்று சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற புதிய அம்சங்கள் செயலியை பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!