TN TRB தேர்வர்கள் கவனத்திற்கு – இனி உங்களுக்கு அந்த கவலையே இல்ல – வரவிருக்கும் முக்கிய மாற்றம்!

0
TN TRB தேர்வர்கள் கவனத்திற்கு - இனி உங்களுக்கு அந்த கவலையே இல்ல - வரவிருக்கும் முக்கிய மாற்றம்!
TN TRB தேர்வர்கள் கவனத்திற்கு - இனி உங்களுக்கு அந்த கவலையே இல்ல - வரவிருக்கும் முக்கிய மாற்றம்!
TN TRB தேர்வர்கள் கவனத்திற்கு – இனி உங்களுக்கு அந்த கவலையே இல்ல – வரவிருக்கும் முக்கிய மாற்றம்!

தமிழகத்தில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு உதவும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரியம் தனது போர்டலை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ள உள்ளதாக திட்டமிட்டுள்ளது. மேலும் இது தொடர்பான விரிவான தகவல்களை பார்ப்போம்.

ஆசிரியர் தேர்வு வாரியம்

தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அரசு பொறியியல், கலை, அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர்கள் உள்ளிட்ட பணியிடத்திற்கான தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அரசு பள்ளிகளில் பல்வேறு பிரிவுகளின் கீழ் இருக்கும் பணியாளர்களை நியமிக்கும் பொறுப்பையும் ஆசிரியர் தேர்வு வாரியம் கொண்டுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த 2012ம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்துவதற்கான பொறுப்பையும் ஏற்றுள்ளது. இந்த நிலையில் TRB தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலையில்லா நபர்களுக்கு ஆட்சேர்ப்பு அட்டவணை, அறிவிப்பு உள்ளிட்ட தகவல்களை மட்டுமே வெளியிடும்.

ஆனால் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அனைத்து தகவல்களையும் வெளியிடுகிறது. இது போன்று TRBயும் தனது இணையதளத்தை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலமாக விண்ணப்பதார்கள் உடனடியாக அனைத்து சேவைகளையும் பெற முடியும். மேலும் இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியிருப்பதாவது, TRB இணையதளத்தில் அறிவிப்புகள் முதல் ரிசல்ட் வரை என அனைத்து தகவல்களும் ஒரே தளத்தில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

Gmail பயனரா நீங்கள்.. அப்போ இந்த விஷயத்தை கண்டிப்பா நீங்க தெரிஞ்சுக்கணும் – முழு விவரம் உள்ளே!

Exams Daily Mobile App Download

மேலும் இவர் தெரிவித்துள்ளதாவது, இதன் முதற்கட்ட நடவடிக்கையாக சோதனை பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. TRB இணையதளத்தில் தேர்வு அறிவிப்பு, தேர்வு முடிவுகள், TNTET சுற்றறிக்கைகள், சமீபத்திய அரசாங்க உத்தரவுகள், ஆன்லைன் பதிவு, ஹால் டிக்கெட் பதிவிறக்கம், வேலை தேடுபவர்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை, ஆவணங்கள் பதிவிறக்கம் மற்றும் ஆர்.டி.ஐ மற்றும் ஆன்லைன் பொதுக் குறைகள் உள்ளிட்ட அனைத்து சேவைகளின் இணைப்புகளும் இணைக்கப்பட உள்ளது. அத்துடன் இதில் பயனாளர்கள் தகவல்களை அறிந்து கொள்ள முதலில் உள்நுழைவு ஐ.டியை உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!