உக்ரைன் மீது போர் தொடுக்க ஆயத்தமாகும் ரஷ்யா? பதட்டத்தில் உலக நாடுகள்! இந்தியாவின் நடவடிக்கை என்ன?

0
உக்ரைன் மீது போர் தொடுக்க ஆயத்தமாகும் ரஷ்யா? பதட்டத்தில் உலக நாடுகள்! இந்தியாவின் நடவடிக்கை என்ன?
உக்ரைன் மீது போர் தொடுக்க ஆயத்தமாகும் ரஷ்யா? பதட்டத்தில் உலக நாடுகள்! இந்தியாவின் நடவடிக்கை என்ன?
உக்ரைன் மீது போர் தொடுக்க ஆயத்தமாகும் ரஷ்யா? பதட்டத்தில் உலக நாடுகள்! இந்தியாவின் நடவடிக்கை என்ன?

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கைகள் தொடர்பான செய்திகள் தற்போது உலக நாடுகளிடையே அச்சத்தை உண்டு பண்ணி இருக்கும் வேளையில், இந்தியாவின் ஆதரவு யார் பக்கம் இருக்கும் என்று பல்வேறு கருத்துக்கள் எழுந்திருக்கிறது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.

போர் பதட்டம்

உலகின் மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாடான ரஷ்யா, தனது அண்டை நாடான உக்ரைன் மீது படையெடுப்புகளை நடத்த இருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது, கடந்த 2013ம் ஆண்டில் உக்ரைனின் அப்போதைய ஜனாதிபதி விக்டர் யானுகோவிச், ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு கூட்டு ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்திருந்தார். இது அந்நாட்டில் ஏகப்பட்ட கிளர்ச்சிகளை உருவாக்கி இருந்தது. இதனை தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு உக்ரைனிலிருந்து, கிரிமியாவை ரஷ்யா இணைத்ததை தொடர்ந்து ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கும் இடையே போர் சூழல் உருவாகியது.

அரசு ஊழியர்களுக்கு பென்சன், பணிக்கொடை தொகை உயர்வு – சூப்பர் அறிவிப்பு வெளியீடு!

இந்நிலையில் சுமார் 8 ஆண்டுகள் கழித்து ரஷ்யா, நாளை (பிப்.16) உக்ரைன் மீது போர் தாக்குதல் நடத்த இருப்பதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இதனால் மீண்டுமாக உக்ரைன் மற்றும் ரஷ்யா எல்லையில் பதட்டமான சூழல் உருவாகி இருக்கிறது. குறிப்பாக, உக்ரைன் எல்லைகளில் ரஷ்யாவின் போர்ப்படை வீரர்கள் 1,30,000 பேர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் தற்சமயம் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் உக்ரைன் – ரஷ்யா போர் குறித்து அமெரிக்காவின் ராணுவ தலைமையகம் பென்டகன் விடுத்துள்ள அறிக்கையில், ‘உக்ரைன் மீது நாளை (பிப்.16) படையெடுப்பு நடத்த இருப்பதாக புதின் கூறியதாக வெளியான தகவல் மீது நம்பிக்கை இல்லை. என்றாலும் எந்தவொரு முன் அறிவிப்பும் இல்லாமல் தாக்குதலை நடத்துவதற்கு புதின் தயாராக இருக்கலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ரஷ்யா – உக்ரைன் பிரச்சனைக்கு மத்தியில், இந்தியாவை சேர்ந்த மாணவர்கள், ஊழியர்கள் என சுமார் 20,000க்கும் மேற்பட்ட உக்ரைனில் வசிக்கின்றனர்.

தமிழகத்தில் 12ம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள் லீக் – திருவண்ணாமலை CEO விடுவிப்பு!

இவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அரசு முக்கிய நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. மேலும் சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைவதற்கு அதாவது பிப்.20க்கு முன்னதாக ரஷ்யா, உக்ரைன் மீது படையெடுக்க வாய்ப்புள்ளது என்பதால், அமெரிக்கா, பிரிட்டன், எஸ்டோனியா, லத்திவியா, நார்வே ஆகிய நாடுகள் தங்களது நாட்டை சேர்ந்த மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற அறிவுறுத்தி உள்ளது. இப்படிப்பட்ட பதட்டமான சூழலுக்கு மத்தியில் ரஷ்யா தரப்பில் இருந்து எந்தவொரு அறிவிப்பும் வராதது போருக்கான துவக்கத்தை முன் நிறுத்துவதாக கணிக்கப்பட்டுள்ளது.

இப்போது ஒருவேளை ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்து இதில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலையீடுகள் இருந்தால் இது அடுத்த உலகப்போருக்கு வழிவகுக்கும் என்று தெளிவாக தெரிகிறது. இந்நிலையில் உக்ரைன் – ரஷ்யா மீதான பிரச்சனையில் இந்தியா ஏதாவது ஒரு பக்கம் ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் உக்ரைன் விவகாரத்தில் இந்தியா, ரஷ்யாவை ஆதரித்தால் அமெரிக்காவுன் உள்ள உறவு சிக்கலை சந்திக்கும்.

ஆனால், ரஷ்யாவுடன் நட்புறவு கொண்டுள்ள இந்திய அரசு, உக்ரைன் பிரச்சனையில் அதற்கு ஆதரவாக நின்றால் அமெரிக்காவுடனான நல்லுறவை இழக்கலாம். ஏனென்றால், இந்தியாவில் உள்ள பாதுகாப்பு தளவாடங்களில் 50% ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. தவிர நம் நாட்டில் இருக்கும் விமானப்படையில் 71% ஜெட் விமானங்கள் ரஷ்யாவில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் உலகளவில் உள்ள சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்வதற்காக Quad அமைப்பில் அமெரிக்காவுடன் இணைந்து இந்தியா பணியாற்றி வருகிறது.

Airtel, Jio, Vi நிறுவனங்களின் 84 நாட்களுக்கான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் – முழு விபரம் இதோ!

அதே நேரத்தில் இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே இருக்கும் இந்தியாவின் எல்லை பிரச்சனைகளிலும் அமெரிக்கா இந்தியாவிற்கு ஆதரவாக தலையிட்டு வருகிறது. மேலும், ரஷ்யாவுடன் ஆயுத ஒப்பந்தம் மேற்கொள்ளும் நாடுகளின் மீது உள்ள CAATSA (Countering America’s Adversaries Through Sanctions Act) என்ற சட்டத்தின் படி விதிக்கப்படும், அமெரிக்காவின் பொருளாதாரத் தடை இதுவரை இந்தியா மீது மேற்கொள்ளப்படவில்லை. இதற்கு இந்தியாவுடனான நட்புறவு மட்டுமே காரணம் ஆகும்.

இப்படி இருக்க உக்ரைன் விவகாரத்தில் இந்தியா, ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்பட்டால் இந்தியாவிற்கும் இந்த பொருளாதார தடை விதிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால், அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளை இந்தியா எப்படி சமாளிக்கும் என்பது தற்போது கேள்விக்குறியாகி இருக்கிறது. இதனால் இந்தியாவின் அடுத்தகட்ட நடவடிக்கை மீதான எதிர்பார்ப்பு உலக நாடுகளின் பார்வையில் முக்கிய புள்ளியாக பார்க்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here