Airtel, Jio, Vi நிறுவனங்களின் 84 நாட்களுக்கான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் – முழு விபரம் இதோ!

0
Airtel, Jio, Vi நிறுவனங்களின் 84 நாட்களுக்கான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் - முழு விபரம் இதோ!
Airtel, Jio, Vi நிறுவனங்களின் 84 நாட்களுக்கான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் - முழு விபரம் இதோ!
Airtel, Jio, Vi நிறுவனங்களின் 84 நாட்களுக்கான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் – முழு விபரம் இதோ!

ஏர்டெல், ஜியோ, வோடப்போன் போன்ற பிரபல நெட்ஒர்க் நிறுவனங்கள் வழங்கும் 3 மாத வேலிட்டியுடன் கூடிய சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள் குறித்து இப்பதிவில் காண்போம். 84 நாட்களுக்கு ரீசார்ஜ் செய்ய நினைப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

ரீசார்ஜ் பிளான்:

இந்தியாவில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வுகளுக்கு பிறகு விலைவாசி என்பது மக்கள் எதிர்பாராத அளவு உயர்ந்து வருகிறது. ஏற்கனவே தொழில் சரிவு, வேலையின்மை போன்ற காரணங்களால் மக்கள் சிரமப்பட்டு வரும் நிலையில் விலைவாசி உயர்வு மக்களை அதிகம் பாதித்துள்ளது. மற்ற நிறுவனங்களை தொடர்ந்து நெட்வொர்க் நிறுவனங்களும் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தியுள்ளது. தற்போது அதிக பயனர்கள் கொண்ட ஏர்டெல், ஜியோ, வோடபோன் நிறுவனங்கள் 25% வரை ப்ரீபெய்ட் பிளான்களில் விலையை உயர்த்தியது.

தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – குற்றம் சாட்டும் எதிர்க்கட்சிகள்!

அதனால் அடிப்படை ரீசார்ஜ் புலன்களின் விலை உயர்ந்துள்ளது. அதனால் பயனர்களுக்கு ரீசார்ஜ் செய்வது என்பது பொருளாதார ரீதியாக சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நிறுவனங்கள் தங்களின் பயனர்களுக்கு உதவும் வகையில் புதிய ரீசார்ஜ் திட்டங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது. ஏர்டெல், ஜியோ, வோடப்போன் நெட் ஒர்க் நிறுவனங்களின் 84 நாள் வேலிடிட்டியுடன் கூடிய சிறந்த ரீசார்ஜ் திட்டங்களை தெரிந்து கொள்வோம்.

ஜியோ:
      • ரூ.666 பிளானில் தினமும் 1.5ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு, தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ சினிமா, ஜியோ டிவி ஆகிய நன்மைகளை 84 நாட்களுக்கு வழங்குகிறது.
      • ரூ.719 திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு, தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ சினிமா, ஜியோ டிவி ஆகிய நன்மைகளை 84 நாட்களுக்கு வழங்குகிறது.
      • ரூ.1,199 திட்டத்தில் தினமும் 3 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ சினிமா, ஜியோ டிவி ஆகிய நன்மைகளை 84 நாட்களுக்கு வழங்குகிறது.
ஏர்டெல்:
      • ரூ.719 திட்டத்தில் தினமும் 1.5ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு, தினமும் 100 எஸ்எம்எஸ், Amazon Prime வீடியோ ஆகிய சலுகைகளை 84 நாட்களுக்கு வழங்குகிறது.
      • ரூ.839 தினமும் 2ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு, தினமும் 100 எஸ்எம்எஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஏர்டெல் தேங்க்ஸ் இலவச சோதனைக்கான அணுகலை 84 நாட்களுக்கு வழங்குகிறது.
விஐ:
      • VI ரூ.719 தினமும் 1.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு, தினமும் 100 எஸ்எம்எஸ், ஆகிய நன்மைகளை 84 நாட்களுக்கு வழங்குகிறது.
      • ரூ.839 தினமும் 2ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு, தினமும் 100 எஸ்எம்எஸ்,கூடுதல் நன்மைகளை 84 நாட்களுக்கு வழங்குகிறது.
      • VI ரூ.459 6 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ், பிங்கே ஆல் நைட், வரம்பற்ற குரல் அழைப்பு, ஆகிய நன்மைகளை 84 நாட்களுக்கு வழங்குகிறது.

        Velaivaippu Seithigal 2022

        To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
        To Join => Whatsapp கிளிக் செய்யவும்
        To Join => Facebookகிளக் செய்யவும்
        To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!