உக்ரைனின் தலைநகர் கீவில் தாக்குதலை நடத்திய ரஷ்யா – தொடங்கியது போர்! பீதியில் மக்கள்!

0
உக்ரைனின் தலைநகர் கீவில் தாக்குதலை நடத்திய ரஷ்யா - தொடங்கியது போர்! பீதியில் மக்கள்!
உக்ரைனின் தலைநகர் கீவில் தாக்குதலை நடத்திய ரஷ்யா - தொடங்கியது போர்! பீதியில் மக்கள்!
உக்ரைனின் தலைநகர் கீவில் தாக்குதலை நடத்திய ரஷ்யா – தொடங்கியது போர்! பீதியில் மக்கள்!

நீண்ட கால திட்டங்களுக்கு மத்தியில் உக்ரைனில், ரஷ்யா தனது முதல் தாக்குதலை பதிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் போர் தொடர்பான ஒரு முக்கிய இராணுவ நடவடிக்கையை இன்று (பிப்.24) அறிவித்திருக்கிறார்.

போர் சூழல்

தற்சமயம் உக்ரைனில் போர் பதற்றம் நீடித்திருக்கும் சூழலில் விரைவில் நாடு முழுவதும் வெடிக்கும் சத்தம் கேட்கும் என்றும், முழு அளவிலான படையெடுப்பு நடந்து கொண்டிருப்பதாகவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் இன்று (பிப்.24) ஒரு இராணுவ நடவடிக்கையை அறிவித்திருக்கிறார். கடந்த சில வாரங்களாக உக்ரைனின் எல்லைகளில் சுமார் 1,50,000 முதல் 2,00,000 வரை குவிக்கப்பட்டுள்ள ரஷ்ய போர்ப்படைகள் போர் தொடுக்கும் முயற்சியில் இறங்கி இருந்தது. இதற்கிடையில் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் தற்போது ஒரு தொலைக்காட்சி சந்திப்பை நிகழ்த்தி இருக்கிறார்.

Post Office பொன்மகன் சேமிப்பு திட்ட கணக்கு தொடங்க விரும்புவோர் கவனத்திற்கு – முழு விபரங்கள் இதோ!

அதில், நான் ஒரு இராணுவ நடவடிக்கையின் முடிவை எடுத்துள்ளேன் என்று ஒரு உரையாடலை நிகழ்த்தி கொண்டிக்கும் வேளையில், உக்ரைனின் தலைநகரான கீவ் மற்றும் பல நகரங்களில் வெடிப்புச் சத்தம் கேட்டதாக செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதே போல கீவின் மையத்தில் வான்வழித் தாக்குதல் நடத்திய சைரன்கள் பதிவாகியுள்ளன. மேலும் உக்ரேனிய வீரர்களை ஆயுதங்களைக் கீழே போடுமாறு அழைப்பு விடுத்த புதின், நாட்டின் கிழக்கு பகுதியில் ஒரு இனப்படுகொலையை அரசாங்கம் மேற்பார்வையிடுவதாக கூறி தனது நடவடிக்கையை நியாயப்படுத்தி இருக்கிறார்.

இந்த நடவடிக்கை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் உடனடி கண்டனத்தை தூண்டி இருக்கிறது. அதே போல உலகளாவிய நிதிச் சந்தைகளில் சில கொந்தளிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கிடையில் கிழக்கு உக்ரைனில் உள்ள கிளர்ச்சித் தலைவர்கள் கீவுக்கு எதிராக மாஸ்கோவிடம் இராணுவ உதவி கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் இன்று (பிப்.24) நடைபெற்ற தாக்குதல்களின் அளவு தெளிவாகத் தெரியவில்லை என்றும் ஆனால் உக்ரைனில் மோசமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ‘புதின், உக்ரைனில் முழு அளவிலான படையெடுப்பை தொடங்கியுள்ளார். அமைதியான உக்ரேனிய நகரங்கள் வேலைநிறுத்தத்தில் உள்ளன. இது ஒரு ஆக்கிரமிப்புப் போர். உக்ரைன் தன்னைத் தற்காத்துக் கொள்ளும். போரில் வெற்றி பெறும். உலகம் புதினை தடுக்க முடியும். தடுக்க வேண்டும். செயல்பட வேண்டிய நேரம் இது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன், இந்த போர் மூலம் ரஷ்யாவிற்கு ஏற்படும் விளைவுகள் பற்றி எச்சரித்து, இது பேரழிவுகரமான உயிர் இழப்பு மற்றும் மனித துன்பங்களுக்கு காரணமாக இருக்கும் என்று கூறி இருக்கிறார்.

தொடர்ந்து உக்ரைன் மீதான ரஷ்யாவின் பொறுப்பற்ற மற்றும் தூண்டுதலற்ற தாக்குதலை நேட்டோவின் தலைவர் கண்டித்துள்ளார். மேலும் ஐரோப்பாவில் ஒரு பெரிய போரை ஆதரிக்க வேண்டாம் என்று உக்ரைனின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ரஷ்யர்களுக்கு வேண்டுகோளை விடுத்திருக்கிறார். இதற்கு முன்னதாக புதினை அழைக்க முயற்சித்ததாகவும், ஆனால் அதற்கு பதில் இல்லை என்றும் உக்ரைனின் எல்லைக்கு அருகில் மாஸ்கோவில் 200,000 வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றோர் கவனத்திற்கு – தள்ளுபடி சான்றிதழ் வழங்கல்!

இதற்கிடையில் 27 நாடுகளைக் கொண்ட கூட்டமைப்பு, ரஷ்யாவின் பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோய் மற்றும் ரஷ்யாவின் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகள் உட்பட உயர்மட்ட நபர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. அதே போல வாஷிங்டன், நார்ட் ஸ்ட்ரீம் 2 எரிவாயு குழாய் மீது பொருளாதாரத் தடைகளையும், ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஜப்பான் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளையும் அறிவித்துள்ளன. இந்த போர் சூழல் உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!