Post Office பொன்மகன் சேமிப்பு திட்ட கணக்கு தொடங்க விரும்புவோர் கவனத்திற்கு – முழு விபரங்கள் இதோ!

0
Post Office பொன்மகன் சேமிப்பு திட்ட கணக்கு தொடங்க விரும்புவோர் கவனத்திற்கு - முழு விபரங்கள் இதோ!
Post Office பொன்மகன் சேமிப்பு திட்ட கணக்கு தொடங்க விரும்புவோர் கவனத்திற்கு - முழு விபரங்கள் இதோ!
Post Office பொன்மகன் சேமிப்பு திட்ட கணக்கு தொடங்க விரும்புவோர் கவனத்திற்கு – முழு விபரங்கள் இதோ!

அஞ்சல் நிலையம்,பெண் குழந்தைகளுக்கு போலவே ஆண் குழந்தைகளுக்கான பொன்மகன் சேமிப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் பல்வேறு நன்மைகள் மற்றும் சிறப்பம்சங்கள் உள்ளன. இந்தத் திட்டம் மூலம் குழந்தைகளின் கல்விக்கு ஏற்ற ஒரு தொகுப்பை பெற்றோர்களால் உருவாக்கித் தர முடியும்.

முழு விபரம்:

மத்திய அரசின் போஸ்ட் ஆபீஸ் சிறு சேமிப்பு திட்டங்கள் குறைவான ரிஸ்க் மற்றும் அதிக பாதுகாப்பை தரும் திட்டங்கள் ஆகும். இந்த வகையில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செல்வமகள் சேமிப்பு திட்டம் அமலில் உள்ளது. இந்த திட்டத்தை தொடர்ந்து ஆண் குழந்தைகளுக்கான பொன்மகன் சேமிப்பு திட்டத்தை அஞ்சல் துறை செயல்படுத்துகிறது. இத்திட்டம் மூலம் வைப்பு முதிர்வு தேதிக்கு முன்பாகவே பணம் பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.கூடுதல் வட்டி மட்டுமின்றி உயர்கல்விக்கு கணிசமான தொகை கிடைக்க உதவும்.

தமிழகத்தில் மார்ச் மாதம் 13 நாட்கள் விடுமுறை? வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு! முழு விபரம் இதோ!

இந்தியா முழுவதும் உள்ள அஞ்சல் நிலையங்களில் இந்த திட்டத்தை எங்கு வேண்டுமானாலும் தொடங்கிக் கொள்ளலாம். இத்திட்டத்தினை தொடங்க குழந்தை வயது 10 வயதுக்கு மேல் உள்ளது எனில், அவர்களின் பெயரிலேயே கணக்கை தொடங்கலாம். இருப்பினும் குழந்தைக்கு வயது 10க்கு குறைவாக இருந்தால் ஜாய்ண்ட் அக்கவுண்ட் மூலம் தொடங்கலாம். இத்திட்டத்திற்கு தேவையான ஆவணங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ், பெற்றோரின் சரியான முகவரி சான்றாக ஆதார் கார்டு, பான் கார்டு, மற்றும் குழந்தையின் புகைப்படம் உள்ளிட்டவை ஆகும்.

திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட் பெற்றாலும் தவிக்கும் பக்தர்கள் – முக்கிய கோரிக்கை!

இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 12 முறை என குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம் மற்றும் தற்போது வட்டி விகிதம் 8.1% ஆகும். ஒவ்வொரு ஆண்டும் வட்டி விகிதம் மாறும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல இந்த திட்டத்தில் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் என்றாலும், அடுத்த 5 ஆண்டு தொகுப்புகளாக அதிகரித்துக் கொள்ளலாம். இந்த பொன்மகன் சேமிப்பு திட்டம் மிகவும் பாதுகாப்பு திட்டமாக மக்களிடையே கருதப்படுகிறது. பிபிஎஃப் கணக்கை அஞ்சலகம், ஐசிஐசிஐ அல்லது எஸ்பிஐ போன்ற வங்கிகளில் தொடங்கலாம். இந்த PPF கணக்கின் கீழ் செய்யப்படும் முதலீடுகளுக்கு வருமான வரி சட்டம் 80C பிரிவின் கீழ் வரி விலக்கு உண்டு.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!