தமிழகத்தில் மார்ச் மாதம் 13 நாட்கள் விடுமுறை? வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு! முழு விபரம் இதோ!

0
தமிழகத்தில் மார்ச் மாதம் 13 நாட்கள் விடுமுறை? வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு! முழு விபரம் இதோ!
தமிழகத்தில் மார்ச் மாதம் 13 நாட்கள் விடுமுறை? வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு! முழு விபரம் இதோ!
தமிழகத்தில் மார்ச் மாதம் 13 நாட்கள் விடுமுறை? வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு! முழு விபரம் இதோ!

இந்தியாவில் மார்ச் மாதம் 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை நாட்களாக அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை பட்டியலை இப்பதிவில் காண்போம். இந்த விடுமுறை பட்டியலை கருத்தில் கொண்டு வங்கி சார்ந்த பணிகளை முடித்து கொள்ளலாம்.

விடுமுறை:

இந்தியாவில் அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. ரிசர்வ் வங்கிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி வருகிறது. மேலும் வங்கிகளுக்கு விடுமுறை குறித்த அட்டவணையையும் வெளியிட்டு வருகிறது. நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை தினங்கள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அந்தந்த மாநில அரசுகளின் விடுமுறை பட்டியலை பொறுத்து விடுமுறை தினம் மாறுபடுகிறது. தற்போது ரிசர்வ் வங்கி மார்ச் மாதத்திற்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது.

திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட் பெற்றாலும் தவிக்கும் பக்தர்கள் – முக்கிய கோரிக்கை!

அதில் மார்ச் மாதத்தில் மட்டும் மொத்தம் 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை நாட்கள் உள்ளது. இந்த விடுமுறை நாட்களை தெரிந்து கொண்டு வாடிக்கையாளர்கள் வங்கி பணிகளை முடித்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விடுமுறை தினத்தில் ஆன்லைன் வங்கி சேவைகள் தொடர்ந்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஏடிஎம் சேவைகளும் மக்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாத வங்கி விடுமுறை:
  • 01.03.2022 – மகா சிவராத்திரி
  • 02.03.2022 – திவாஸ்
  • 03.03.2022 – லோசர்
  • 04.03.2022 – சக்பார் குட்
  • 06.03.2022 – ஞாயிறு விடுமுறை
  • 12.03.2022 – இரண்டாவது சனிக்கிழமை
  • 13.03.2022 – ஞாயிற்றுக்கிழமை
  • 17.03.2022– ஹோலிகா டஹான்
  • 18.03.2022 – ஹோலி பண்டிகை
  • 19.03.2022 – ஹோலி அல்லது யசோங்
  • 20.03.2022 – ஞாயிற்றுக்கிழமை
  • 26.03.2022 – நான்காம் சனிக்கிழமை
  • 27.03.2022 – ஞாயிற்றுக்கிழமை

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!