இலவச ரேஷன் பொருட்கள் வாங்கும் பொதுமக்கள் கவனத்திற்கு – UIDAI வெளியிட்ட புது அப்டேட்!

0
இலவச ரேஷன் பொருட்கள் வாங்கும் பொதுமக்கள் கவனத்திற்கு - UIDAI வெளியிட்ட புது அப்டேட்!
இலவச ரேஷன் பொருட்கள் வாங்கும் பொதுமக்கள் கவனத்திற்கு - UIDAI வெளியிட்ட புது அப்டேட்!
இலவச ரேஷன் பொருட்கள் வாங்கும் பொதுமக்கள் கவனத்திற்கு – UIDAI வெளியிட்ட புது அப்டேட்!

நாடு முழுவதும் அரசு சார்பில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு மலிவு விலையில் பொருள்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், இனி ஆதார் கார்டை பயன்படுத்தி ரேஷன் பொருள்கள் வாங்கும் வசதியை UIDAI அறிவித்துள்ளது.

ரேஷன் பொருள்கள்:

நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசால் இலவச ரேஷன் மற்றும் மலிவான விலையில் ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இலவச ரேஷன் வாங்கும் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை UIDAI அறிவித்துள்ளது. அதன் படி UIDAI தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், நீங்கள் ஆதார் அட்டையை புதுப்பிப்பது மூலமாக நாடு முழுவதும் எங்கிருந்து வேண்டுமானாலும் இலவச ரேஷன் வாங்கலாம்.

Follow our Instagram for more Latest Updates

ஏற்கனவே பல மாநிலங்களில் அமலில் உள்ள ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் மூலமாக மக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் ஆதார் அட்டையை பயன்படுத்தி ரேஷன் வாங்கலாம். இந்த வசதியை பெற ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டியது கட்டாயம் ஆகும். மேலும் உங்கள் ஆதார் அட்டையைப் புதுப்பிக்க அருகிலுள்ள ஆதார் மையத்தைத் தொடர்புகொள்ளலாம். ஆதார் மையம் குறித்த தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளமான https://bhuvan.nrsc.gov.in/aadhaar/ மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இனி Profile-இல் பாடலை சேர்க்கலாம்.. இன்ஸ்டாவில் வரவுள்ள புதிய அப்டேட்.. பயனர்கள் ஹாப்பி!

Exams Daily Mobile App Download

மக்கள் வீட்டு வேலை முதல் வங்கி சேவைகள் வரை அனைத்தும் செய்வதற்கு ஆதார் அட்டையை POI/POA ஆவணங்களுடன் புதுப்பித்து வைப்பது கட்டாயம் ஆகும். அதனால் நாடு முழுவதும் உள்ள அனைத்து குடிமக்களும் ஆதார் அட்டையை புதுப்பிப்பது கட்டாயம் ஆகும். இதற்கான கட்டணமாக ஆன்லைன் மூலமாக செய்தால் ரூ. 25 மற்றும் ஆப்லைன் மூலமாக செய்தால் ரூ. 50 வசூலிக்கப்படும். அது மட்டுமில்லாமல் ஆதார் அட்டை குறித்த ஏதேனும் புகார்களுக்கு 1947 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம் என, UIDAI வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!