ஆன்லைன் மூலம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்கும் வழிமுறைகள் – UIDAI அறிவிப்பு!

0
ஆன்லைன் மூலம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்கும் வழிமுறைகள் - UIDAI அறிவிப்பு!
ஆன்லைன் மூலம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்கும் வழிமுறைகள் - UIDAI அறிவிப்பு!
ஆன்லைன் மூலம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்கும் வழிமுறைகள் – UIDAI அறிவிப்பு!

இந்தியாவில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்கும் பணியினை தேர்தல் ஆணையம் தொடங்கிவிட்டது. இந்த நிலையில் இதனை எவ்வாறு ஆன்லைன் மூலம் செயல்படுத்துவது குறித்து வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தேர்தல் ஆணையம்:

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் வைத்திருக்க வேண்டிய முக்கிய ஆவணமாக வாக்காளர் அடையாள அட்டை விளங்குகிறது. இந்திய தேர்தல் ஆணையம் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தி வருகிறது. நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எந்த இடத்தில் இருந்தாலும் இந்த வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தி வாக்களிக்கலாம். வாக்களிப்பது இந்தியாவில் உள்ள அனைவரின் முக்கிய கடமையாகும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வாக்காளர் அடையாள அட்டை தான் அனைத்து வேலைகளுக்கும் முக்கிய ஆவணமாக விளங்கியது. தற்போது மத்திய அரசின் உத்தரவின்படி ஆதார் அனைத்து தேவைகளுக்கும் ஆதாரமாக விளங்குகிறது.

TN Job “FB  Group” Join Now

இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆதாருடன் தொலைபேசி எண் இணைக்கப்பட வேண்டும் என்று UIDAI அறிவித்திருந்தது. அவ்வாறு இணைத்தால் மட்டுமே அரசின் மூலம் பெறப்படும் அனைத்து சலுகைகளும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நாட்டில் நூறில் என்பது சதவீதம் பேர் ஆதார் அட்டையுடன் தொலைபேசி எண்ணை இணைத்துவிட்டனர் . தற்போது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் போலி வாக்காளர்களை எளிதில் கண்டுபிடிக்க முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் இதனை எவ்வாறு ஆன்லைன் மூலம் இணைப்பது குறித்து வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கான அறிவிப்பு – இன்றே கடைசி நாள்! இதற்காக தான்!

1. voterportal.eci.gov.in என்ற தேர்தல் ஆணையத்தின் இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

2. உங்கள் மின்னஞ்சல், வாக்காளர் அடையாள அட்டை எண், அல்லது செல்போன் எண் ஆகியவற்றின் மூலம் லாகின் செய்யலாம்.

3. எந்த மாநிலம், மாவட்டம், தாலுகா மற்றும் பிறந்த தேதி, பெயர், தந்தை பெயர், ஆகியவற்றையும் பதிவு செய்ய வேண்டும்.

4. அதன் பின் சேர்ச் பட்டனை அழுத்த வேண்டும். (அவ்வாறு அழுத்தினால், நீங்கள் பதிவு செய்த விவரங்களும் அரசின் பதிவேட்டில் இருக்கும் விவரங்களும் சரியாக இருக்கிறதா என்பது தெரியவரும்)

5. அதன் பின் கணினியின் இடது பக்க திரையில் பீட் ஆதார் நம்பர் என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

6. திரையில் வரும் பகுதியில் ஆதார் கார்டு பெயர், ஆதார் கார்டு எண், வாக்காளர் அடையாள அட்டை எண், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும்.

7. அனைத்து விவரங்களையும் சரிபார்த்த பின் சப்மிட் செய்யலாம்.

8. நீங்கள் பதிவு செய்யப்பட்ட விவரங்கள் வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டது என்ற தகவல் திரையில் வரும். அதன் பின் இணைக்கப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!