ரயிலில் பயணம் செய்வோருக்கான முக்கிய அறிவிப்பு – டிக்கெட்டில் இதை கவனத்திருக்கிறீர்களா?

0
ரயிலில் பயணம் செய்வோருக்கான முக்கிய அறிவிப்பு - டிக்கெட்டில் இதை கவனத்திருக்கிறீர்களா?
ரயிலில் பயணம் செய்வோருக்கான முக்கிய அறிவிப்பு - டிக்கெட்டில் இதை கவனத்திருக்கிறீர்களா?
ரயிலில் பயணம் செய்வோருக்கான முக்கிய அறிவிப்பு – டிக்கெட்டில் இதை கவனத்திருக்கிறீர்களா?

ஒவ்வொருவரின் ரயில் டிக்கெட்டிலும் ஐந்து இலக்க எண் இடம் பெற்றிருக்கும். ஒவ்வொரு இலக்க எண்ணும் எதை குறிக்கிறது எனவும், அதன் அர்த்தம் என்ன என்பது குறித்தான முழு விவரங்களும் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

ரயிலில் பயணம்:

உலகில் போக்குவரத்து நிறுவனங்கள் எவ்வளவுதான் வளர்ச்சியடைந்து கொண்டே சென்றாலும் மக்கள் அதிகமாக ரயில் போக்குவரத்தை தான் விரும்புகின்றனர். ரயில் பயணிகளின் பாதுகாப்பு கருதியும், வேகமாகவும் சவுகரியமாக பயணிக்கலாம் என்பதற்காகவும் பெரும்பாலான பயணிகள் ரயில் போக்குவரத்தை தான் பின்பற்றி வருகின்றனர். ஒவ்வொரு ரயில் டிக்கெட்டிலும் ஐந்து இலக்க எண் எழுதப்பட்டிருக்கும். ஒவ்வோர் எண்ணும் எதைக் குறிப்பிடுகிறது என்பது நமக்கு தெரியாது. அதாவது ஒவ்வொரு எண்ணிற்கும் தனித்துவமான ஒரு மதிப்பு இருக்கிறது. அதாவது 5 இலக்கங்களில் 0 முதல் 9 வரையிலான இலக்கங்கள் உள்ளன.

Infosys நிறுவன ஊழியர்களுக்கு புதிய விதிமுறைகள் – 2வது அறிவிப்பு வெளியீடு!

ரயில் டிக்கெட்டில் 0 என இருந்தால் அது சிறப்பு ரயில் என்று அர்த்தம். கோடைகால சிறப்பு மற்றும் விடுமுறை சிறப்பு அல்லது ஏதேனும் சிறப்பு ரயிலாக அது இருக்கும். சிறப்பு ரயில் என்று குறிப்பிடுவதற்காகத்தான் 0 என இந்த ரயில் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஹோலி, தீபாவளி பண்டிகை போன்ற சிறப்பு ரயில்களில் எண்ணிக்கையும் 0 முதல் தொடங்கப்படும். முதல் இலக்கம் 5 என்றால் ரயில் பயணிகள் என்று அர்த்தம். 6 என்றால் மெது ரயில் என்று அர்த்தம். 7 என்றால் DEMU ரயில் என்றும், 8 ஆக இருந்தால் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் என்றும், 9 ஆக இருந்தால் மங்கையின் சப்-அர்பன் ரயில் என்றும் அர்த்தம்.

Exams Daily Mobile App Download

மேலும், முதல் இலக்கம் 1 என்றால் அந்த ரயில் நீண்ட தூரம் பயணிக்கிறது என்று அர்த்தம். அதாவது அந்த ரயில் ராஜ்தானி, சதாப்தி, ஜன் சதார், சம்பர்க் கிராந்தி, கரிப் ரத் மற்றும் துரந்தோ ஆகிய ரயில்களில் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம். முதல் இலக்கம் 2 ஆக இருந்தாலும் அந்த ரயில் நீண்ட தூரம் பயணிக்கும் என்று தான் அர்த்தம். முதல் இலக்கம் 3 என்றால் அந்த ரயில் கொல்கத்தா துணை நகர்ப்புற ரயில் என்று அர்த்தம். முதல் இலக்கம் 4 ஆக இருந்தால் அந்த ரயில் டெல்லி, சென்னை, செஹந்திராபாத் மற்றும் பிற மெட்ரோ நகரங்களின் துணை நகர்ப்புற ரயில் என்றும் அர்த்தம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!