TNPSC குரூப் 2, 2A தேர்வு எழுத உள்ளோர் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை – முக்கிய பாடத்தலைப்புகள்!

0
TNPSC குரூப் 2, 2A தேர்வு எழுத உள்ளோர் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை - முக்கிய பாடத்தலைப்புகள்!
TNPSC குரூப் 2, 2A தேர்வு எழுத உள்ளோர் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை - முக்கிய பாடத்தலைப்புகள்!
TNPSC குரூப் 2, 2A தேர்வு எழுத உள்ளோர் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை – முக்கிய பாடத்தலைப்புகள்!

தமிழகத்தில் TNPSC குரூப் 2 , 2A தேர்வு நாளை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு மையங்களில் நடைபெற உள்ளது. சுமார் 11.78 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இத்தேர்வை எழுத உள்ளனர். தற்போது தேர்வர்களுக்கு உதவும் வகையிலான முக்கிய பாடத்தலைப்பு குறித்த விவரங்களை இப்பதிவில் காண்போம்.

குரூப் தேர்வு:

தமிழக அரசு துறையில் இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், தொழில்துறை ஆணையர் மற்றும், வணிகம், மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவை பிரிவு, வணிக வரி அதிகாரி, நகராட்சி ஆணையர், கூட்டுறவு சங்கங்க ஆய்வாளர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, ஸ்டெனோ-டைப்பிஸ்ட், நுகர்வோர் ஊரக வளர்ச்சி துறை, நன்னடத்தை அதிகாரி, தணிக்கை ஆய்வாளர், உதவி ஜெயிலர் உள்ளிட்ட 33 க்கும் மேற்பட்ட பதவிகளுக்கு குரூப் 2, 2A போன்ற போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 வருடமாக கொரோனா பரவல் காரணமாக இத்தேர்வானது நடைபெறவில்லை.

Exams Daily Mobile App Download

இந்த வருடம் பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில் குரூப் 2, 2A தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது. கடந்த பிப்ரவரி மாதம் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவுகள் நடைபெற்றது. இதில் 4.96 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், 6.81 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் என மொத்தம் 11.78 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். இதனையடுத்து 5,400 காலிப்பணியிடங்களை கொண்ட இந்த குரூப் 2, 2A தேர்வானது நாளை (மே 21) நடைபெற உள்ளது.

முக்கிய பாட தலைப்புகள்:

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, இந்திய அரசியலமைப்பு சட்டம், இந்திய அரசியலமைப்பு சட்டம் முன்னுரை, இந்து சமவெளி நாகரிகம், இந்திய புவியியல், ஒம்புட்ஸ்மன், அடிப்படை கடமைகள், தேர்தல் ஆணையம், இந்திய குடியுரிமை, நிதி ஆயோக் வகுப்புவாதம் மற்றும் தேசபிரிவினை, அடிப்படை உரிமைகள், அப்டிடியூட், அல்ஜிப்ரா, ரேஷியோ மற்றும் பிரபோர்ஷன் , பெரியார் சுயமரியாதை இயக்கம் ,வேலூர் கலகம், இந்திய மற்றும் தமிழக அரசியல் தலைவர்கள், சீர்திருத்தவாதிகள், சுல்தான், முகலாயர்கள், குப்தர்கள், பாளையக்காரர்கள், சுதந்திர போராட்டம் போன்ற தலைப்புகளை தேர்வர்கள் தவறாமல் படித்து கொள்வது நல்லது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!