கோபிக்கு கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணிவெடி வைக்கிறாங்களே’ – ஹிட் சீரியல்களின் டாப் கமெண்ட்ஸ்!

0
கோபிக்கு கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணிவெடி வைக்கிறாங்களே' - ஹிட் சீரியல்களின் டாப் கமெண்ட்ஸ்!
கோபிக்கு கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணிவெடி வைக்கிறாங்களே' - ஹிட் சீரியல்களின் டாப் கமெண்ட்ஸ்!
கோபிக்கு கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணிவெடி வைக்கிறாங்களே’ – ஹிட் சீரியல்களின் டாப் கமெண்ட்ஸ்!

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா முதல் சன் டிவியின் ரோஜா சீரியல் வரை பரபரப்பாக போய்க் கொண்டிருக்கும் ஹிட் சீரியல்களின் ப்ரோமோ மற்றும் அதற்கான ரசிகர்களின் கமெண்டுகளை பற்றியும் இந்த பதிவில் காண்போம்.

டாப் கமெண்ட்ஸ்:

மெகா சீரியல்கள் இல்லாமல் மக்களின் பொழுது போக்கை குறிப்பிட முடியாது. அந்த அளவிற்கு மெகா சீரியல்கள் மக்களின் வாழ்வோடு ஒன்றி உள்ளது. அனைத்து தரப்பு வயதினரும் சீரியல் பார்ப்பதை வழக்கமாக்கி உள்ளனர். இதற்கு உதவும் வகையில் பல இணையத்தளங்களிலும் அன்றாட சீரியல்கள் ஒளிபரப்பப்படுகிறது. இதனால் சீரியல் குறித்த மற்றும், அதன் ப்ரோமோ குறித்த கமெண்டுகளையும் அறிந்து கொள்ள முடிகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

மீனா தனத்தின் குழந்தையை கண்ணனிடம் காட்டுவதற்கு தூக்கி சென்றதால் குழந்தையை காணாமல் அனைவரும் பதறும் காட்சிகள் ப்ரோமோவாக வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் மீனா மட்டும் தான் நல்ல மருமகள். ஜீவாவும் மீனாவும் பேசுறது நல்லா இருக்கு என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் தனம் அம்மா தேவையில்லாம சண்டையை உண்டு பண்ணுகிறார் என்று கூறியுளளார். மற்றொரு ரசிகர் மீனா மட்டும்தான் கண்ணனை பாசமா பாத்துக்கிறாங்க என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் மீனாவுக்கு ஆதரவாகவே கருத்துக்களை பதிவிட்டு்ளளனர்.

பாரதி கண்ணம்மா:

லட்சுமி தனது அப்பாவை பற்றி கேட்டதும் உன்னை எப்படியாவது சேர்த்து வைக்கிறேன் என்று கண்ணம்மா கூறுவது போல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் கண்ணம்மா கேரக்டரில் ரோஷினி தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் அந்த டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பீர்களா மாட்டீங்களா… என்று கேட்டுள்ளார்.

காதலியை கரம் பிடிக்கும் அஜித்தின் ‘வலிமை’ பட வில்லன் – கல்யாண தேதி அறிவிப்பு! ரசிகர்கள் குஷி!

இதற்கு எல்லாத்துக்கும் காரணம் அந்த வெண்பா தான் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் நாடகம்.. நம்ம வாழ்வின் பொன்னான நேரங்களை அழிக்கும் அரக்கன்.. என கூறியுள்ளார். கொரோனா புண்ணியத்தில் போன லாக்டவுனில் பாரதியும் கண்ணம்மாவும் சேர்ந்திருந்தது போல இந்த மழை வெள்ளப் புண்ணியத்தில் சேர்ந்து இருப்பாங்க பாப்பா கவலைப் படாதே என ஒருவர் கூறியுள்ளார்.

பாக்கியலட்சுமி:

கோபி தனது மனைவியுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்து ராதிகா கவலையுடன் செல்வது போல் காட்சிகள் உள்ளது. இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் கோபிக்கு கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணிவெடி வைக்கிறாங்களே என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் ராதிகா நீ பாத்தது நா இல்ல, என் தம்பி, அவன் பெயர் பாபி என்று சொல்வது போலவும், அதற்கு ராதிகா அப்படியா கோபி நா அப்போவே நினைச்சேன்,அவரு உங்க அளவுக்கு அழகு இல்ல என்று சொல்வது போலவும் பதிவிட்டுள்ளார். இருக்கு சம்பவம் இருக்கு அதெல்லாம் என் தலைவன் கோபி சமாளிச்சுருவாப்ல என்று ஒருவர் கூறியுள்ளார்.

ராஜா ராணி 2:

ரோட்டில் செல்லும் போது ஒரு குழந்தையை இடித்து விட்டு வேகமாக செல்லும் ரவுடிகளை போலீசில் புடித்து கொடுப்பது போல் ப்ரோமோ காட்சிகள் உள்ளது. இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் கொஞ்சம் காமெடியா தான் இருக்கு ஆனா போக போக பழகிரும் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் சண்டை போட்டது சரவணன் ஆனா சந்தியாவுக்கு வேலை என்ன சார் இது என்று கேட்டுள்ளார். பல வருஷம் பரீட்சை லாம் எழுத வேணாம்.. வில்லன புடிச்சி கொடுத்த உடனே போலீஸ் வேலை குடுக்கறாங்க.. என கூறியுள்ளார்.

ரோஜா:

ரோஜா சீரியலின் ப்ரோமோ பார்த்த ரசிகர் ஒருவர் இப்படியே போனால் செம்பருத்தி கதைதான் ரோஜாவுக்கும் ,ரேட்டிங்கில் கடைசியில் போய் நிற்கும், ஹீரோயின் கஷ்டத்திலேயே இருந்தால் பெண்களுக்கு பிடிக்காது டைரக்டரே, மாத்தியோசிங்க என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் ரோஜா அக்கா நீங்க பண்ற பரிகாரம் எல்லாம் சோதனைகளையும் வென்று விடுவீர்கள் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் அர்ஜூன் சார் மற்றும் செண்பகம் அம்மாவுக்கு எதுவும் ஆகக்கூடாது என்று கூறியுள்ளார்.

நாம் இருவர் நமக்கு இருவர்:

சீர்வரிசை செய்யும் போட்டியில் மாறனை விட மாயன் அதிகமாக செய்வது போல் உள்ளது. இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் மாயன் ரொம்ப சூப்பர் இதைத்தான் நாங்கள் எதிர்பார்ததோம் என்று கூறியுள்ளார்.

சன் டிவி சீரியல்களில் நம்பர் 1 இடத்தை பிடித்த சஞ்சீவ் & சைத்ராவின் ‘கயல்’ – ரசிகர்கள் வாழ்த்து மழை!

மற்றொரு ரசிகர் மாறன் ஏன் இப்படி சோகமாய்டடீங்க.. கவலைப்படாதீங்க மாயன் உங்க அண்ணன் தான் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் சபாஷ் சரியான பதிலடி மாயன் மாஸ் என்று கூறியுள்ளனர். மேலும் ரசிகர்கள் பலரும் மாயன் இப்படித்தான் செய்வார் என்பது முன்பே தெரியும் என்று கூறியுள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!