காதலியை கரம் பிடிக்கும் அஜித்தின் ‘வலிமை’ பட வில்லன் – கல்யாண தேதி அறிவிப்பு! ரசிகர்கள் குஷி!

0
காதலியை கரம் பிடிக்கும் அஜித்தின் 'வலிமை' பட வில்லன் - கல்யாண தேதி அறிவிப்பு! ரசிகர்கள் குஷி!
காதலியை கரம் பிடிக்கும் அஜித்தின் 'வலிமை' பட வில்லன் - கல்யாண தேதி அறிவிப்பு! ரசிகர்கள் குஷி!
காதலியை கரம் பிடிக்கும் அஜித்தின் ‘வலிமை’ பட வில்லன் – கல்யாண தேதி அறிவிப்பு! ரசிகர்கள் குஷி!

தமிழகத்தின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான அஜித் அவர்கள் நடித்து வெளிவர உள்ள வலிமை படத்தின் வில்லன் கார்த்திகேயா என்பவர் நீண்ட நாட்களாக காதலித்த பெண்ணை திருமணம் செய்யவுள்ளதாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

கார்த்திகேயா திருமணம்:

தமிழக திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான அஜித் அவர்கள் நடிப்பில் வெளிவர உள்ள படம் தான் வலிமை. இந்த படத்தில் அஜித் அவர்களுக்கு வில்லனாக கார்த்திகேயா என்பவர் நடித்துள்ளார். இவர் கடந்த 2010 ம் ஆண்டு வாராங்கலில் படித்த நாள் முதல் லோஹிதா ரெட்டி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். கார்த்திகேயா நடித்த இரண்டாவது படம் ஆர்எக்ஸ் 100, 2018 ல் ரிலீசானது. கோலிவுட்டில் முதல் படமான வலிமை 2022 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது.

சன் டிவி சீரியல்களில் நம்பர் 1 இடத்தை பிடித்த சஞ்சீவ் & சைத்ராவின் ‘கயல்’ – ரசிகர்கள் வாழ்த்து மழை!

இவ்வளவு ஆண்டு காதல் பயணத்திற்கு பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் 23 ம் தேதி எளிய முறையில் தனிப்பட்ட குடும்ப விழாவாக இவர்களின் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. மேலும் இவர்களின் திருமணம் ராஜ விக்ரமார்காவில் நடைபெற உள்ளதாகவும் கூறியுள்ளனர். அதனை தொடர்ந்து ஒரு விழாவில் கலந்துகொண்டுள்ள கார்த்திகேயா தனது வருங்கால மனைவியான தற்போதைய காதலிக்கு அனைவரின் முன்னிலையிலும் சர்ப்ரைஸ் தரும் வகையில் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். சினிமா ஹீரோ போல் அவர் காதலை வெளிப்படுத்திய விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

பிக் பாஸ் அபிஷேக் பற்றி முதன்முறையாக மனம் திறந்த நமீதா மாரிமுத்து – ரசிகர் கேள்விக்கு பதில்!

அவ்வாறு லோஹித்தாவிடம் காதலை சொன்ன மேடையிலேயே தங்களின் திருமணம் நவம்பர் 21 ம் தேதி நடைபெற உள்ளதாக கார்த்திகேயா அறிவித்துள்ளார். அப்போது லோஹிதாவை மீடியாக்களுக்கு அறிமுகப்படுத்தி இவர் என்னுடைய ஃபிரண்ட், கிரஷ், கேர்ள்ஃபிரண்ட், எக்ஸ் கேர்ஸ்ஃபிரண்ட், மீண்டும் ஃபிரண்ட், பெஸ்ட் ஃபிரண்ட், காதலி, இப்போது எனது வாழ்க்கை துணையாக போகிறார் என்று கூறியுள்ளார். மேலும் லோஹிதா உடனான காதல் பயணத்திற்கு அவர் நன்றி கூறி சந்தோசமாக உள்ளேன் என கேப்ஷன் பதிவிட்டுள்ளார். இந்த போஸ்ட் செம வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!