பசும்பொன் தேவர் ஐயா குறித்து விஜய் சேதுபதி பேசியது உண்மையா? நடிகர் தரப்பு விளக்கம்!

0
பசும்பொன் தேவர் ஐயா குறித்து விஜய் சேதுபதி பேசியது உண்மையா? நடிகர் தரப்பு விளக்கம்!
பசும்பொன் தேவர் ஐயா குறித்து விஜய் சேதுபதி பேசியது உண்மையா? நடிகர் தரப்பு விளக்கம்!
பசும்பொன் தேவர் ஐயா குறித்து விஜய் சேதுபதி பேசியது உண்மையா? நடிகர் தரப்பு விளக்கம்!

பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி ரசிகர் ஒருவரால் தாக்கப்பட்டார். இது குறித்து விளக்கமளித்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

நடிகர் விளக்கம்:

சமீபத்தில் பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி ரசிகர் ஒருவரால் தாக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து தாக்கிய ரசிகர் மகா காந்தி கூறியதாவது, அண்மையில் தேசிய விருது வாங்கிய விஜய் சேதுபதியிடம் ‘விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள்’ என்றேன். குருபூஜைக்கு ஏன் வரவில்லை என்று அவரிடம் கேட்டேன். அதற்கு விஜய் சேதுபதி யார் குரு? என்று கேட்டார். தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போதே என்னை தாக்கினார்கள்.

நடிகர் விஜய் சேதுபதியை எட்டி உதைத்தால் ரூ.1001 பரிசு – இந்து மக்கள் கட்சி தலைவர் பதிவால் அதிர்ச்சி!

அதனால் தான் நான் திருப்பி தாக்கினேன். இது தொடர்பாக விமான நிலைய சி.சி.டி.வி காட்சிகளை கேட்டுள்ளேன். அதன் மூலம் அவர்கள் என்னை தாக்கியதை நிருபிப்பேன் என்று கூறியுள்ளார். இந்த சர்ச்சை தீவிரமடைந்து வரும் நிலையில் அதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய விஜய் சேதுபதி கூறியதாவது, பெங்களூர் விமானத்தில் நிலை தவறிய நிலையில் ஒருவர் என்னை அணுகினார். நான் பிறகு பேசலாம் என்றேன். ஆனால் நீ என் ஜாதிதான பேசுப்பா, நானும் நடிகர் தான் என்பது போல சத்தமாக கேட்டபடி வந்தார்.

சன் டிவி சீரியல்களில் நம்பர் 1 இடத்தை பிடித்த சஞ்சீவ் & சைத்ராவின் ‘கயல்’ – ரசிகர்கள் வாழ்த்து மழை!

மற்றபடி அவர் காணொளியில் சொல்வது போல தேசியத்தையும், தெய்வீகத்தையும் அதே சமயம் தமிழர்களையும் தன் உயிராக கருதி வாழ்ந்த தெய்வத் திருமகனார் பசும்பொன் அய்யா குறித்து நான் எதுவும் பேசவில்லை என்றும் கூறிய அவர் ரசிகர்களிடம் நான் எப்படி நடந்து கொள்வேன் என்பதை நாடறியும் என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து அவதூறு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்துள்ளேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!