தமிழகத்தின் ‘இந்த’ பகுதிகளுக்கு நாளை (ஆக.12) மின்தடை – மின்சார வாரியம் தகவல்!

0
தமிழகத்தின் ‘இந்த’ பகுதிகளுக்கு நாளை (ஆக.12) மின்தடை – மின்சார வாரியம் தகவல்!
தமிழகத்தின் ‘இந்த’ பகுதிகளுக்கு நாளை (ஆக.12) மின்தடை – மின்சார வாரியம் தகவல்!
தமிழகத்தின் ‘இந்த’ பகுதிகளுக்கு நாளை (ஆக.12) மின்தடை – மின்சார வாரியம் தகவல்!

சேலம் மாவட்ட சங்ககிரி ஐவேலி துணை மின் நிலையத்தில் நாளை (ஆகஸ்ட் 12) மாதாந்திர பணி நடைபெற உள்ள காரணத்தால், மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் எஸ்.உமாராணி சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை :

தமிழகத்தில் மாதம் ஒருமுறை அந்தந்த மாவட்டங்களில் உள்ள துணை மின் நிலையத்தில் மின் கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகளில் உள்ள பழுதுகளை சரி செய்யும் பணியும், அதன் மீது படர்ந்திருக்கும் செடி, கொடிகளை அகற்றும் பணியும் மின் வாரியம் சார்பில் மேற்கொள்ளப்படும். ஏனெனில் மின் கம்பங்களில் இருந்து சீரான மின் விநியோகம் அனைத்து பகுதிகளுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக இப்பணிகள் மின்வாரிய ஊழியர்களை கொண்டு மேற்கொள்ளப்படுகிறது.

Exams Daily Mobile App Download

இந்த பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது அந்தந்த துணை மின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும். மேலும், மின் தடை ஏற்பட உள்ள பகுதிகள் குறித்த அறிவிப்புகளும் முன்னரே சென்று விடும். அவ்விதமாக சேலம் மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 12) மேற்கொள்ளவிருக்கும் மின் பராமரிப்பு பணியின் நிமித்தம் அங்கிருந்து மின்விநியோகம் பெறக்கூடிய பகுதிகளுக்கு மின்தடை ஏற்படும் எனவும், அந்த இடங்கள் குறித்த தகவல்களும் மின் வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளன.

சென்னை: ஆபரண தங்கத்தின் விலை அதிரடி குறைவு – நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!

மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் :

 

சங்ககிரி ஐவேலி துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் சங்ககிரி டவுன், ஐவேலி, அக்கமாபேட்டை, வடுகப்பட்டி, இடையப்பட்டி, வளையசெட்டிபாளையம், இருகாலூர், ஆவரங்கம்பாளையம், தேவண்ணகவுண்டனூர், சுண்ணாம்பு குட்டை, ஒலக்கசின்னமனூர், தங்காயூர், வைகுண்டம், சங்ககிரி ரயில் நிலையம், வெள்ளையம்பாளையம், காளி கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை (வெள்ளிக்கிழமை ) அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என செயற்பொறியாளர் எஸ்.உமாராணி தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here