Gold Rate: ஒரே நாளில் 40,100-ஐ தாண்டிய தங்கம் விலை – அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!! இன்றைய நிலவரம் என்ன?

0
Gold Rate: ஒரே நாளில் 40,100-ஐ தாண்டிய தங்கம் விலை - அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!! இன்றைய நிலவரம் என்ன?
Gold Rate: ஒரே நாளில் 40,100-ஐ தாண்டிய தங்கம் விலை - அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!! இன்றைய நிலவரம் என்ன?
Gold Rate: ஒரே நாளில் 40,100-ஐ தாண்டிய தங்கம் விலை – அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!! இன்றைய நிலவரம் என்ன?

தமிழகத்தில் இம்மாத தொடக்கத்தில் தங்கத்தின் விலை 40 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. இதையடுத்து இன்றும் தங்கத்தின் விலை அதிரடி உயர்வை கண்டுள்ளது. தற்போது இன்றைய தங்கத்தின் நிலவரம் குறித்து பார்ப்போம்.

தங்கம் விலை:

தமிழகத்தில் தங்கத்தின் விலை இந்த மாத தொடக்கத்தில் அதிரடி உயர்வை கண்டது. கடந்த மாதம் ரூ. 39 ஆயிரத்திற்கு மேல் விற்பனையான தங்கத்தின் விலையானது இம்மாத தொடக்கத்தில் அதிரடியாக உயர்ந்து ரூ.40 ஆயிரத்தை தொட்டது. இருப்பினும் பொதுமக்களிடம் தங்கத்தை வாங்குவதற்கான ஆர்வம் குறைவதில்லை. மேலும் அயல் நாட்டினரும் தங்கத்தின் மீது அதிக முதலீடு செலுத்துகின்றனர்.

 

இதனால் தங்கத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் இதன் விலையும் அதிகரித்து கொண்டே வருகிறது. அதன்படி கடந்த 5ம் தேதி அன்று தங்கத்தின் விலை ரூ.40,360 என அதிரடியாக உயர்ந்தது. இதனை தொடர்ந்து நேற்று தங்கத்தின் விலை அதிரடி சரிவை கண்டது. அதன்படி சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.40,080 என விற்பனை செய்யப்பட்டது.

அதிகரிக்கும் சைபர் க்ரைம் குற்றங்கள்.. மக்களை காக்க காவல் துறையின் புதிய முயற்சி!

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து சவரன் ரூ.41 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதன்படி இன்று ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.6 என உயர்ந்து ரூ. 5,016 என விற்பனையாகிறது. இதையடுத்து ஒரு சவரனுக்கு ரூ.48 உயர்ந்து ரூ.40,128க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை 20 காசுகள் குறைந்து கிராமுக்கு ரூ.71க்கும் இதே போல் ஒரு கிலோ வெள்ளி ரூ.71,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!