தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் தேர்வு இல்லாமல் வேலை – சம்பளம்: ரூ.25,000/-
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் காலியாக உள்ள Urban Planner /Town Planning Specialist, Capacity building/Institutional Strengthening Specialist, MIS Specialist, Social Development Specialist & IEC Specialist பணியிடங்களை நிரப்ப தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 11 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் 22.04.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் |
பணியின் பெயர் | Urban Planner /Town Planning Specialist, Capacity building/Institutional Strengthening Specialist, MIS Specialist, Social Development Specialist & IEC Specialist |
பணியிடங்கள் | 11 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 22.04.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய காலிப்பணியிடங்கள்:
- Urban Planner /Town Planning Specialist – 2 காலிப்பணியிடங்கள்
- Capacity building/Institutional Strengthening Specialist – 2 காலிப்பணியிடங்கள்
- MIS Specialist – 5 காலிப்பணியிடங்கள்
- Social Development Specialist – 1 பணியிடம்
- Information, Education and Communication (IEC) Specialist – 1 பணியிடம்
TNSCB வயது வரம்பு:
31.03.2022 தேதியின் படி, விண்ணப்பதார்கள் வயதானது அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
TN Job “FB Group” Join Now
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் அல்லது டிப்ளமோ/ பட்டம் முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை:
தகுதி, அனுபவம் மற்றும் விண்ணப்பத்தார்களின் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, நேர்காணல் நடத்தப்படும். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
சம்பள விவரங்கள்:
மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.25000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து நிர்வாகப் பொறியாளர், (HFA செல்), தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (TNUHDB), 5, காமராஜர் சாலை, சென்னை – 600 005 என்ற முகவரிக்கு 22.04.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.