TNPSC Group 2, 2A தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – விடைத்தாள் மதிப்பீடு எப்போது? கட் ஆஃப் மார்க் எவ்வளவு?

0
TNPSC Group 2, 2A தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு - விடைத்தாள் மதிப்பீடு எப்போது? கட் ஆஃப் மார்க் எவ்வளவு?
TNPSC Group 2, 2A தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு - விடைத்தாள் மதிப்பீடு எப்போது? கட் ஆஃப் மார்க் எவ்வளவு?
TNPSC Group 2, 2A தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – விடைத்தாள் மதிப்பீடு எப்போது? கட் ஆஃப் மார்க் எவ்வளவு?

தமிழகம் முழுவதும் திட்டமிட்டபடி கடந்த மே 21 ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2A தேர்வுகள் (tnpsc group 2) நடந்து முடிந்தது. இந்த நிலையில், தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும், கட் ஆஃப் மதிப்பெண்கள் எப்படி இருக்கும் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

முழு விவரம்:

தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப் 2, 2ஏ தேர்வுகள் கடந்த மே 21 அன்று நடைபெற்றது. இதில் குரூப் 2 பிரிவில் 116 காலியிடங்களும், குரூப் 2ஏ பிரிவில் 5,413 காலியிடங்களுக்கும் தேர்வுகள் நடைபெற்றது. 5 ஆயிரத்திற்கும் அதிகமான இந்த பணியிடங்களுக்கு சுமார் 11 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்து இருந்தனர். தமிழகம் முழுவதும் இருந்து மொத்தம் 11.78 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுத தகுதி பெற்று இருந்தனர். இருப்பினும் தேர்வுக்குப் பதிவு செய்தவர்களில் சுமார் 1.80 லட்சம் பேர் இந்தத் தேர்வுக்கு வரவில்லை. தமிழகம் முழுவதும் 9.94 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.

PM KISAN உதவித்தொகை பெறும் பயனாளிகள் கவனத்திற்கு – ஆதார் இணைக்க அவகாசம் நீட்டிப்பு!

மேலும், விடைத்தாள் மதிப்பீடு பணிகள் முடிந்த பிறகு குரூப் 2 முதல்நிலைத் தேர்வு முடிவுகளை வரும் ஜூன் மாத இறுதியில் வெளியிட டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளது. முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெறுவோரில் ஒரு காலியிடத்திற்கு 10 பேர் என்ற வீதத்தில் முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். வரும் செப். மாதம் முதன்மைத் தேர்வை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் TNPSC குரூப் 2 தேர்வுக்கான தற்காலிக விடைத்தாளை அதிகாரப்பூர்வ இணையதளமான http://tnpsc.gov.in -யில் மே 27  அன்று வெளியிட்டது. இந்நிலையில், இந்த குரூப் 2 முதல்நிலைத் தேர்வுக்கு கட் ஆஃப் எவ்வளவு இருக்கும் என்ற கேள்வி தேர்வர்களிடம் எழுந்துள்ளது.

TNPSC குரூப் 2 கட் ஆஃப் மதிப்பெண்கள்::
விண்ணப்பதாரர் பிரிவு
ஆண் கட் ஆஃப் ஸ்கோர்
 பெண் கட் ஆஃப் மதிப்பெண்கள்
பொது விண்ணப்பதாரர் 161 மதிப்பெண்கள்   158 மதிப்பெண்கள்
BC விண்ணப்பதாரர்கள் 159 மதிப்பெண்கள்  157 மதிப்பெண்கள்
MBC விண்ணப்பதாரர்கள்  156 மதிப்பெண்கள்  154 மதிப்பெண்கள்
SC விண்ணப்பதாரர்கள்  153 மதிப்பெண்கள்  150 மதிப்பெண்கள்
ST விண்ணப்பதாரர்கள்  144 மதிப்பெண்கள் 140 மதிப்பெண்கள்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!