TNPSC Group II நேர்காணல் பட்டியல் – சற்றுமுன் வெளியீடு!

0
TNPSC Group II நேர்காணல் பட்டியல் - சற்றுமுன் வெளியீடு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2022 ஆம் ஆண்டுக்கென ஒதுக்கப்பட்ட Group II பதவிக்கான மூன்றாம் கட்ட நேர்காணலுக்கு (Oral Test / Phase – III) தேர்வு செய்யப்பட்ட நபர்களின் பட்டியலானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த முழுமையான தகவல்கள் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

நேர்காணல் பட்டியல் வெளியீடு:

தமிழக அரசு அலுவலகங்களில் குரூப் 2, 2ஏ பிரிவின் கீழ்வரும் பதவிகளுக்கென 2022 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட 5529 காலியிடங்களுக்கான அறிவிப்பானது TNPSC தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டது. இக்காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் இந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது. இதன் படி TNPSC Group II முதன்மை தேர்வானது 25.02.2023 அன்றும் நடத்தப்பட்டு முடிவுகள் 11.01.2024 அன்று வெளியிடப்பட்டது. அதன் பிறகு முதற் கட்ட நேர்காணல் 2024 பிப்ரவரி 12ம் தேதி முதல் 17ம் தேதி வரை மற்றும் கலந்தாய்வானது 21ம் தேதி அன்று நடைபெற்றது.

TCS நிறுவனத்தில் காத்திருக்கும் அருமையான வேலை – BE முடித்தவர்கள் விரைந்து விண்ணப்பியுங்கள்!

இதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட நேர்காணலானது 05.03.2024 அன்று நடத்தப்பட்டது. இந்நிலையில் இரண்டு கட்ட நேர்காணல்களின் மூலம் பூர்த்தி செய்யப்படாத 29 Special Branch Assistant பணியிடங்களை நிரப்ப வேண்டி மூன்றாம் கட்ட நேர்காணல் நடைபெறவுள்ளதாக TNPSC தேர்வாணையம் அறிவித்துள்ளது. மேலும் இந்த மூன்றாம் கட்ட நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களின் பட்டியலையும், நேர்காணல் நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பையும் இன்று (26.04.2024) https://www.tnpsc.gov.in/ என்ற இணையதள முகவரியில் வெளியிட்டுள்ளது. இதன் படி, மூன்றாம் கட்ட நேர்காணலானது 01.04.2024 அன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், TNPSC சாலை, சென்னை – 600 003 என்ற முகவரியில் நடத்தப்பட உள்ளது. இந்த நேர்காணல் குறித்த தகவல் தேர்வர்களுக்கு தபால் மூலம் அனுப்பப்படமாட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!