TNPSC குரூப் 4 & VAO விடைக்குறிப்பு வெளியீடு – சரிபார்க்கும் வழிமுறைகள் இதோ!

0
TNPSC குரூப் 4 & VAO விடைக்குறிப்பு வெளியீடு - சரிபார்க்கும் வழிமுறைகள் இதோ!
TNPSC குரூப் 4 & VAO விடைக்குறிப்பு வெளியீடு - சரிபார்க்கும் வழிமுறைகள் இதோ!
TNPSC குரூப் 4 & VAO விடைக்குறிப்பு வெளியீடு – சரிபார்க்கும் வழிமுறைகள் இதோ!

தமிழகத்தில் கடந்த ஜூலை 24ம் தேதி நடைபெற்ற TNPSC குரூப் 4& VAO தேர்வின் விடை குறிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

குரூப் 4 & VAO:

தமிழகத்தில் TNPSC குரூப் 2, 2A தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. இதற்கான முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் டைபிஸ்ட், ஸ்டெனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்களுக்கான TNPSC குரூப் 4 & VAO தேர்வு கடந்த ஜூலை 24ம் தேதி நடைபெற்றது. இந்தாண்டு தேர்வுக்கு சுமார் 21.85 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 18.5 லட்சம் பேர் மட்டுமே தேர்வை எழுதினர். அதில் 12.67 லட்சம் பேர் பெண்கள், 9.35 லட்சம் பேர் ஆண்கள், 131 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவார்.

Exams Daily Mobile App Download

இத்தேர்வானது மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு நடைபெற்றது. ஒவ்வொரு வினாவிற்கும் 1.5 மதிப்பெண்கள் வழங்கப்படும். நடப்பாண்டு தேர்வு மிகவும் எளிமையாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் கட் ஆப் மதிப்பெண்கள் குறித்து சில தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. அதாவது பொது பிரிவினருக்கு 165 – 175 வரையிலும் மற்ற பிரிவினர்கள் 145-155 வரையிலும் கட் ஆப் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தற்போது குரூப் 4 தேர்வின் விடை குறிப்பு வெளியாகி உள்ளது. தேர்வெழுதியவர்கள் இந்த விடை குறிப்பை பார்த்து உங்கள் மதிப்பெண்களை கணக்கிடலாம்.

TNPSC Group 4 தேர்வர்கள் கவனத்திற்கு – Answer Key Challenge செய்யும் எளிய வழிமுறைகள்

விடைக்குறிப்பு பதிவிறக்கம்:
  • முதலில் TNPSC யின் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அதில் TNPSC குரூப் 4 ஆன்சர் கீ 2022 இணைப்பில் ‘What’s New’ என்பதை கிளிக் செய்யவும்.
  • TNPSC குரூப் 4 ஆன்சர் கீ 2022 pdf வடிவில் இருக்கும். அதனை கிளிக் செய்து பதில் விசையை முழுமையாக சரிபார்க்கவும்.
  • பிறகு முழு விடை குறிப்பையும் டவுன்லோட் செய்து வைத்துக் கொள்ளலாம்.
  • மேலும் தேர்வர்கள் விடை குறிப்பில் உங்களது ஆட்சேபனையும் தெரிவிக்கலாம்.

Download TNPSC Official Answer Key

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!