TNPSC இல் டிகிரி முடித்தவர்களுக்கான சூப்பர் வேலை – 40+ காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!

0
TNPSC இல் டிகிரி முடித்தவர்களுக்கான சூப்பர் வேலை - 40+ காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!
TNPSC இல் டிகிரி முடித்தவர்களுக்கான சூப்பர் வேலை - 40+ காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!
TNPSC இல் டிகிரி முடித்தவர்களுக்கான சூப்பர் வேலை – 40+ காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!

சற்றுமுன் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனும் TNPSC ஆணையத்தின் மூலம் தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைய அறநிலையத்துறை துணை சேவை அமைப்பில் (TNHRCE Subordinate Service – Code No. 009) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Executive Officer Grade III (Code No. 1654) பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் மற்றும் விண்ணப்பிக்க தேவையான இணையதள இணைப்பு இப்பதிவில் வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் விருப்பமுள்ளவர்கள் 17.06.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

TN Job “FB  Group” Join Now

நிறுவனம் Tamil Nadu Public Service Commission (TNPSC)
பணியின் பெயர் Executive Officer Grade III
பணியிடங்கள் 42
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

TNPSC Job காலிப்பணியிடம்:

சற்றுமுன் வெளியாகிய TNPSC அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பில் (Advertisement No. 616, Notification No. 12/2022) Executive Officer Grade III (Code No. 1654) பணிக்கு என மொத்தமாக 42 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல் கீழே உள்ளது.

TN Govt Job கல்வி விவரம்:

Executive Officer Grade III பணிக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையத்தில் Arts / Science / Commerce போன்ற பிரிவின் கீழ் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.

TNHRCE Job வயது விவரம்:

01.07.2022 அன்றைய தினத்தின் படி, Executive Officer Grade III பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கட்டாயம் 25 வயது பூர்த்தியடைந்தவராக இருப்பது அவசியம்.

மேலும் அதிகபட்ச வயதானது, SCs, SC(A)s, STs, MBC / DCs, BCs & Destitute Widows of all Castes ஆகிய வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு கிடையாது என்றும், இவர்களை தவிர மற்ற வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு 37 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

TNPSC Job ஊதிய விவரம்:

Executive Officer Grade III பணிக்கு என்று தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் பணியாளர்களுக்கு Level-10 என்கிற அரசு ஊதிய அளவின் படி குறைந்தது ரூ.20,600/- முதல் அதிகபட்சம் ரூ.75,900/- வரை மாத ஊதியம் வழங்கப்படும். மேலும் இப்பணிக்கு வழங்கப்படும் கூடுதல் தொகை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.

TN Govt Job தேர்வு செயல்முறை:

கீழுள்ள தேர்வு செயல் முறைகளின் வாயிலாக Executive Officer Grade III பணிக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்து தேர்வு (Written Examination)
சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate verification)
கலந்தாய்வு (Counselling)

TNHRCE Job பதிவு கட்டணம்:

Executive Officer Grade III பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்களுக்கு பதிவு கட்டணமாக (One Time Registration) ரூ.150/- செலுத்த வேண்டி இருக்கும் என்று அறிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

TNPSC Job தேர்வு கட்டணம்:

Executive Officer Grade III பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு கட்டணமாக ரூ.100/- மட்டும் செலுத்த வேண்டி இருக்கும் என்று அறிவித்துள்ளது.

TN Govt Job தேதி விவரம்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நாள்: 19.05.2022

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இறுதி நாள்: 17.06.2022

எழுத்து தேர்வு நடைபெறும் நாள் விவரம்: 10.09.2022

Paper-I தேர்வானது 10.09.2022 (9.30 A.M to 12.30 P.M)
Paper – II தேர்வானது 10.09.2022 (02.00 P.M. to 05.00 P.M)

TNHRCE Job விண்ணப்பிக்கும் முறை:

Executive Officer Grade III தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று அங்குள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை பெற்று அதனை சரியாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை அத்துடன் இணைத்து சமர்ப்பிக்கவும் மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாளாக 17.06.2022 ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், அதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

Download Job Notification PDF

Online Apply LINK

TNPSC Official Website

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!