TNPSC கூட்டுறவுத் துறையில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ!

0
TNPSC கூட்டுறவுத் துறையில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ!
TNPSC கூட்டுறவுத் துறையில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ!
TNPSC கூட்டுறவுத் துறையில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது . அந்த வகையில் தற்போது TNPSC கூட்டுறவுத் தணிக்கைத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது

அரசு வேலைவாய்ப்பு:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக எந்த ஒரு அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் கொரோனா தாக்கம் தற்போது குறைந்து வருவதால் படிப்படியாக அறிவிப்பும் வெளியாகி வருகிறது. இந்த வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கூட்டுறவு தணிக்கைத் துறையில் காலியாக உள்ள 8 உதவி இயக்குனர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மீண்டும் முழு ஊரடங்கு அமல் – தமிழக எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்ட வாகனங்கள்!

TNPSC அறிவித்துள்ள பணியின் பெயர் உதவி இயக்குனர் கூட்டுறவு தணிக்கை (Assistant Director of Co-operative Audit) ஆகும். இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் 01.07.2022 அன்று 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் இப்பணியிடத்திற்கு எம்.ஏ(கூட்டுறவு) அல்லது எம்,காம்., எம்.காம் (கூட்டுறவு) மற்றும் கூட்டுறவு பிரிவில் டிப்ளோமா அல்லது ஐசிஏஐ படிப்பை முடித்திருக்க வேண்டும். இதனை தொடர்ந்து பணியில் நியமிக்கப்படுவர்களுக்கு மாத சம்பளம் ரூ.56,100 முதல் 1,77,500 லட்ச ரூபாய் வரை வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள், எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகள். இப்பணிக்கு http://www.tnpsc.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே நிரந்தரப் பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு – இன்னும் 2 நாட்கள் மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!

இந்த பணிக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.150 ஆகும். மேலும் SC, SC(A), ST, MBC(V), MBC – DNC, MBC, BC, BCM உள்ளிட்ட வகுப்பினருக்கு மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு தேர்வு கட்டணம் கிடையாது. இப்பணிக்கான தேர்வு ஏப்ரல் 30ம் தேதி, காலை முதல்தாள் மற்றும் மதியம் இரண்டாம் தாள் தேர்வு நடைபெறும். இந்த பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 21.02.2022 ஆகும். மேலும் பணி தொடர்பான கூடுதல் விபரங்கள் அறிய அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று பார்க்கவும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!