TNPSC குரூப் 2, 2A தேர்வு அறிவிப்பு 2021 – காலிப்பணியிடங்கள்! கல்வித்தகுதி & சம்பளம்!

0
TNPSC குரூப் 2, 2A தேர்வு அறிவிப்பு 2021 - காலிப்பணியிடங்கள்! கல்வித்தகுதி & சம்பளம்!
TNPSC குரூப் 2, 2A தேர்வு அறிவிப்பு 2021 - காலிப்பணியிடங்கள்! கல்வித்தகுதி & சம்பளம்!
TNPSC குரூப் 2, 2A தேர்வு அறிவிப்பு 2021 – காலிப்பணியிடங்கள்! கல்வித்தகுதி & சம்பளம்!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட உள்ள குரூப் 2 மற்றும் 2A தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே இப்பிரிவுகளில் உள்ள காலிப்பணியிட விபரங்களை தெரிவிக்குமாறு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

TNPSC அறிவிப்பு:

தமிழக அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அடுத்தடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தலும் முடிவடைந்துள்ள நிலையில் TNPSC தேர்வு அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது. தற்போது TNPSC தேர்வாணையம் வாயிலாக ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அதில் Combined Civil Services Examination – II (குரூப் 2 மற்றும் 2A) தேர்வு அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது. எனவே இப்பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்கள் உத்தேச எண்ணிக்கையை 2021-2022 ஆண்டு நிலவரப்படி தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு – முதல்வர் இன்று ஆலோசனை!

இதனால் விரைவில் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என்பதால் தேர்வர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். TNPSC குரூப் 2, 2A தேர்வில் கலந்து கொள்ள ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இத்தேர்வின் மூலம் துணை வணிகவரி அதிகாரி, சார் பதிவாளர் முதல் தனிப்பட்ட கிளார்க், ஸ்டெனோ டைப்பிஸ்ட் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு / நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் பணியமர்த்தப்படுவர். குரூப் 2 பணியிடங்களில் ரூ. 9300 முதல் ரூ. 34800 வரை சம்பளம் வழங்கப்படும். குரூப் 2A பணியிடங்களில் ரூ. 5200 முதல் ரூ.20200 வரை ஊதியம் வழங்கப்படும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

ஏற்கனவே TNPSC மேற்கொண்ட ஆலோசனையின் படி இம்மாதம் குரூப் 4 VAO, குரூப் 2, 2A தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. கொரோனா பரவல் காரணமாக பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ள நிலையில் நடப்பு ஆண்டிற்கான புதிய தேர்வு கால அட்டவணையை வெளியிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

Download Official Press News

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!