விஜய் டிவி பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்கள் நிறுத்தம்? ரசிகர்கள் அதிர்ச்சி!

1
விஜய் டிவி பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்கள் நிறுத்தம்? ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய் டிவி பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்கள் நிறுத்தம்? ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய் டிவி பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்கள் நிறுத்தம்? ரசிகர்கள் அதிர்ச்சி!

விஜய் தொலைக்காட்சியில் ஒவ்வொரு பண்டிகையின் போதும் சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்குவது வழக்கம். அந்த வகையில் சீரியல்கள் நாளை மற்றும் நாளை மறுநாள் ஒளிபரப்படுமா? அல்லது சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுமா? என்ற கேள்விகள் எழுத்துள்ளது.

சிறப்பு நிகழ்ச்சிகள்

மக்கள் தற்போது சீரியல்கள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை தான் அதிகமாக விரும்பி பார்க்கின்றனர். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. குறிப்பாக, பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், ராஜா ராணி 2 போன்ற சீரியல்களுக்கு எப்போதுமே தமிழ் சீரியல்களின் டாப் ரேட்டிங்கில் முதல் 5 இடங்களை பிடித்து விடும். பல கட்ட திருப்பங்களுடன் அனைத்து சீரியல்களும் தற்போது ஒளிபரப்படுகிறது.

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” வெண்பாவின் கர்ப்பகால புதிய வீடியோ – குவியும் லைக்குகள்!

சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங்கை கருத்தில் கொண்டு தொலைக்காட்சி குழு மக்களின் பிரதான நிகழ்ச்சியான ‘பிக் பாஸ் 5’ நிகழ்ச்சியை 10 மணிக்கு ஒளிபரப்பி வருகின்றது. எப்போதுமே இந்த நிகழ்ச்சி 9 அல்லது 9.30 மணிக்கு தான் ஒளிபரப்பப்படும். சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங்கிற்காக சனிக்கிழமை கூட சீரியல்கள் ஒளிபரப்படுகிறது. இது இப்படியாக இருக்க, அடுத்த இரண்டு நாட்களும் பண்டிகை நாட்களாக வருகிறது. ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி என்று தொடர்ச்சியாக இரண்டு நாட்களும் பண்டிகைகளாக இருக்கிறது. இதன் காரணமாக அனைத்து தொலைக்காட்சிகளிலும் சிறப்பு திரைப்படங்கள், சிறப்பு நிகழ்ச்சிகள் என்று ஒளிபரப்பப்படும்.

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” ப்ரோமோ – தனது மகன் பற்றி கண்ணீருடன் பேசிய தாமரை! ரசிகர்கள் நெகிழ்ச்சி!

அதே போல் விஜய் தொலைக்காட்சியில் நாளை மற்றும் நாளை மறுநாள் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் எப்போதும் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் நாளை ஒளிபரப்படுமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளது. அதே போல் சீரியல்கள் நாளை மற்றும் நாளை மறுநாள் நிறுத்தி வைக்கப்பட்டுவிட்டு, சனிக்கிழமை ஒளிபரப்பப்படுமா? என்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. தற்போதைய தகவல்களின்படி இரவு 7 மணி வரை மட்டுமே சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் ஒளிபரப்பப்படும் என்றும் அதன் பிறகு சீரியல்கள் தான் ஒளிபரப்பப்படும் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!