விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” வெண்பாவின் கர்ப்பகால புதிய வீடியோ – குவியும் லைக்குகள்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாரதி கண்ணம்மா" வெண்பாவின் கர்ப்பகால புதிய வீடியோ - குவியும் லைக்குகள்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” வெண்பாவின் கர்ப்பகால புதிய வீடியோ – குவியும் லைக்குகள்!

விஜய் டிவியில் டாப் சீரியலான பாரதி கண்ணம்மா சீரியலில், வெண்பாவாக நடித்து வருபவர் நடிகை பரீனா. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் தற்போது புதிதாக வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பாரதி கண்ணம்மா:

தமிழ் தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் மக்களின் மனம் கவர்ந்த சீரியல் வரிசையில் ஒரு சில சீரியல்கள் மட்டுமே இருக்கின்றது. அதில் விஜய் தொலைக்காட்சி சீரியல்களுக்கு தனி வரவேற்பு உண்டு. அந்த வகையில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கும் அனைத்து கதாபாத்திரமும் மக்களிடம் நல்ல புகழ் பெற்றுள்ளது. அதில் வில்லியாக நடிக்கும் வெண்பாவிற்கு அதிக வரவேற்பு என்றாலும் நிஜ வாழ்க்கையிலும் அவரை திட்டி குவித்து வருகின்றனர். காரணம், தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நடிகை பரினா, தாறுமாறாக போட்டோஷூட் நடத்தி வருவது தான்.

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” ப்ரோமோ – தனது மகன் பற்றி கண்ணீருடன் பேசிய தாமரை! ரசிகர்கள் நெகிழ்ச்சி!

9 மாசம் ஆனாலும் தொடர்ந்து சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் இருந்து விலகுவார் என எதிர்பார்த்த நிலையில், தொடர்ந்து தற்போது வரை அந்த சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், பல போட்டோஷூட்களை நடத்தி சர்ச்சைகளில் சிக்கினார். தினமும் செல்லும் இடங்களில் இருந்து ஒரு பதிவை பதிவு செய்யும் அவர், தற்போது புதிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

சந்தியா, சரவணனிற்கு வண்டி ஓட்ட சொல்லி தருவதை பார்த்த சிவகாமி – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!

அதில் விஜய் மற்றும் வடிவேலு பேசும் காமெடி டயலாக் இடம் பெற்றுள்ளது. அதுமட்டுமில்லாமல் அவர் கர்ப்பகால உடற்பயிற்சிகளை செய்தும் வீடியோவை பதிவிட்டுள்ளார். மேலும் அடிக்கடி ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து வரும் அவருக்கு அடுத்த மாதம் குழந்தை பிறக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின் அவர் தொடர்ந்து இந்த சீரியலில் நடிப்பாரா? என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!