தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்களுக்கு ரூ.50,000/- சம்பளத்தில் அரசு வேலை!
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, கட்டியம், உதவி சுயம்பாகம், திருமஞ்சனம், மாலைகட்டி, வயலின் (உபகோவில்), புல்லாங்குழல் (உபக்கோவில்) மற்றும் சலவையலர் ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 15.11.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் |
பணியின் பெயர் | கட்டியம், உதவி சுயம்பாகம், திருமஞ்சனம், மாலைகட்டி, வயலின் (உபகோவில்), புல்லாங்குழல் (உபக்கோவில்) மற்றும் சலவையலர் |
பணியிடங்கள் | 10 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 15.11.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் காலிப்பணியிடங்கள்:
- கட்டியம் – 2 பணியிடங்கள்
- உதவி சுயம்பாகம் – 2 பணியிடங்கள்
- திருமஞ்சனம் – 1 பணியிடம்
- மாலைகட்டி – 1 பணியிடம்
- வயலின் (உபகோவில்) – 1 பணியிடம்
- புல்லாங்குழல் (உபக்கோவில்) – 1 பணியிடம்
- சலவையலர் – 2 பணியிடங்கள்
TNHRCE பழனி தகுதி விவரங்கள்:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
வயது வரம்பு:
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது மற்றும் அதிகபட்சம் 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
IT துறையில் வேலைதேடுபவரா? உங்களுக்கான Wipro நிறுவன வேலைவாய்ப்பு இதோ!
TNHRCE சம்பள விவரம்:
- கட்டியம் – ரூ.11,600 – 36,800/-
- உதவி சுயம்பாகம் – ரூ.10,000 – 31,500/-
- திருமஞ்சனம் – ரூ.11,600 – 36,800/-
- மாலைகட்டி – ரூ.10,000 – 31,500/-
- வயலின் (உபகோவில்) – ரூ.15,700 – 50,000/-
- புல்லாங்குழல் (உபக்கோவில்) – ரூ.15,700 – 50,000/-
- சலவையலர் – ரூ.11,600 – 36,800/-
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுயசான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் 15-11-2022 அன்று அல்லது அதற்கு முன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.
Download Notification 2022 Pdf
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்