தமிழக அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு – 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

0
தமிழக அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு - 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
தமிழக அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு - 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
தமிழக அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு – 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை (TNHRCE) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் அலுவலக உதவியாளர் (Office Assistant) & ஓட்டுநர் (Driver), பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE)
பணியின் பெயர் Driver, Office Assistant
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.04.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
TNHRCE பணியிடங்கள்:

வெளியாகியுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில், அலுவலக உதவியாளர் (Office Assistant) பணிக்கு 9 பணியிடங்கள் மற்றும் ஓட்டுநர் (Driver) பணிக்கு 1 பணியிடம் வீதம் மொத்தமாக 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TNHRCE கல்வித் தகுதி:
  • அலுவலக உதவியாளர் (Office Assistant) பணி மற்றும் ஓட்டுநர் (Driver) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையத்தில் கட்டாயம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • மேலும் ஓட்டுநர் (Driver) பணிக்கு விண்ணப்பதாரர்கள் LMV License மற்றும் Badge கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் நல்ல உடற்தகுதி வைத்திருக்க வேண்டும்.
TNHRCE வயது வரம்பு:

இப்பணிக்கு குறைந்தபட்ச வயது வரம்பாக 18 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகபட்ச வயதானது, பொது பிரிவினருக்கு 32 வயது என்றும், BC, MBC, DNC விண்ணப்பதாரர்களுக்கு 34 வயது என்றும், SC, ST விண்ணப்பதாரர்களுக்கு 37 வயது என்றும், வயது வரம்பு அளிக்கப்பட்டுள்ளது.

TNHRCE ஊதிய விவரம்:
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ஓட்டுநர் (Driver) பணிக்கு ரூ.19,500/- முதல் ரூ.62,000/-

  • அலுவலக உதவியாளர் (Office Assistant) பணிக்கு ரூ.15,700/- முதல் ரூ.50,000/- என்றும் மாத ஊதியம் வழங்கப்படும்.
TNHRCE தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNHRCE விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று இப்பணிக்கு என்று கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தேவையான ஆவணங்களை இணைத்து இறுதி நாளான 21.04.2022 ம் தேதி மாலை 50.30 மணிக்குள் வந்து சேரும் படி தபால் அனுப்ப கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!