TNDTE தேர்வர்களின் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு !

0
TNDTE தேர்வர்களின் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு !
TNDTE தேர்வர்களின் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு !

TNDTE தேர்வர்களின் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

தமிழ்நாடு தொழில்நுட்பக்‌ கல்வி இயக்ககத்தில் இருந்து வணிகவியல்‌ பயிலகங்கள் மற்றும் தேர்வர்களுக்காக முக்கிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
TNDTE தேர்வர்களின் கவனத்திற்கு:

தொழில்நுட்பக்‌ கல்வி இயக்ககத்தினால்‌ 2022-ம்‌ ஆண்டு பிப்ரவரி மாதத்தில்‌ நடத்தப்படவுள்ள வணிகவியல்‌ தேர்வுக்காக இணையதளம்‌ மூலம்‌ விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கப்பட வேண்டிய இறுதி நாள்‌ 18.01.2022 என இத்துறையின்‌ இணையதளத்தின்‌ மூலம்‌ அறிவிக்கை வெளியிடப்பட்டது.

ஜனவரி மாதத்தில்‌ புத்தாண்டு விடுமுறை, பொங்கல்‌ விடுமுறை, இரண்டாம்‌ சனிக்கிழமை என 5 தினங்கள்‌ வங்கிகளுக்கு விடுமுறை என்பதாலும்‌ பயிலக உரிமையாளர்கள்‌ T.T.C பயிற்சி ஆசிரியர்களாக பணியாற்றியதாலும்‌, இணையவழி விண்ணப்பிப்பதற்கான இறுதி நாளை நீட்டிக்கும்படி பபிலக உரிமையாளர்கள்‌ கோரிக்கை வைத்துள்ளனர்‌.

எனவே, பயிலக உரிமையாளர்களின்‌ கோரிக்கையினைக்‌ கருத்தில்‌ கொண்டு வணிகவியல்‌ தேர்வுக்கான விண்ணப்பங்கள்‌ இணையவழியாக விண்ணப்பிப்பதற்கான ஒறுதி நாள்‌ 24.01.2022 வரை கால அளவு நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும்‌ பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை இயக்ககத்திற்கு சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாள்‌ 28.01.2022 வரை கால அளவு நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும்‌ தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

Best TNPSC Coaching Center – Join Now

மேலும்‌, தற்பொழுது கொரோனா பரவல்‌ அதிகமாக உள்ளதால்‌ தட்டச்சு பயிலகங்கள்‌ மூடப்பட்ட நிலையில்‌ மாணாக்கர்கள்‌ தங்களது சொந்த ஊர்களுக்குச்‌ சென்றுவிட்டதால்‌ தேர்வு விண்ணப்பப்‌ படிவத்தில்‌ மாணாக்கர்களின்‌ கையொப்பம்‌ பெறுவதில்‌ சிரமம்‌ உள்ளது என தெரிவித்து, தட்டச்சு பயிலக சங்கங்களும்‌ மற்றும்‌ மாணாக்கர்களும்‌ இது குறித்து தெளிவுரை வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்‌. எனவே, மாணாக்கர்களின்‌ நலன்‌ கருதி ஏற்கனவே COA தேர்வு நடைமுறையில்‌ பின்பற்றுவதைப்‌ போன்று, இணையவழி விண்ணப்பத்தில்‌ மாணாக்கர்களின்‌ கையொப்பம்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்டுள்ளதால்‌ அதனையே மெய்தன்மை உடையதாகக்‌ கருதி தட்டச்சு உரிமையாளர்கள்‌ மட்டும்‌ ஒருங்கிணைக்கப்பட்ட உறுதி ஆவணப்‌ பட்டியலில்‌ ((Consolidated Declaration List – Nominal Roll) தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில்‌ கையொப்பமிட்டு விண்ணப்பப்‌ படிவங்களை சமர்ப்பிக்கலாம்‌ என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!