TN TRB தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளோர் கவனத்திற்கு – TET புதிய பாடத்திட்ட விபரங்கள் வெளியீடு!

0
TN TRB தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளோர் கவனத்திற்கு - TET புதிய பாடத்திட்ட விபரங்கள் வெளியீடு!
TN TRB தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளோர் கவனத்திற்கு – TET புதிய பாடத்திட்ட விபரங்கள் வெளியீடு!

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவுகள் முடிவடைந்த நிலையில் தாள் 1 மற்றும் தாள் 2-க்கான புதிய பாடத்திட்ட விவரத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

டெட் தேர்வு:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்து வந்த நிலையில் அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் பள்ளிகளை திறக்க அரசு அனுமதி அளித்தது. அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள 2,207 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப கோரிக்கைகள் எழுந்தது. இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து கடந்த மாதம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு 17% அகவிலைப்படி (DA) உயர்வு – கோரிக்கைகள் முன்வைப்பு!

இந்த நேரத்தில் கொரோனா பரவல் அதனால் விதிக்கப்பட்ட ஊரடங்கு போன்ற காரணத்தால் தேர்வு ரத்து செய்யப்பட்டது. தற்போது பாதிப்பு எண்ணிக்கைகள் குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாலும் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவியதால் ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதித் தேர்வு நடத்த திட்டமிட்டது. டெட் தேர்வில் இரண்டு தாள்கள் உள்ளது .இதில் முதல் பட்டதாரி ஆசிரியர்களுக்குரியது பட்டப்படிப்பு மற்றும் ஆசிரியர் கல்வி (B.Ed) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அடுத்ததாக தாள் 2 இடைநிலை ஆசிரியர்களுக்குரியது ஆசிரியர் கல்வி பட்டயப் படிப்பு (D.TED) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் முதல் தாள் எழுதுவதற்கு 12 ஆம் வகுப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வை எழுத கல்வித்தகுதி மட்டுமே அவசியம், வயது வரம்பு கிடையாது. விண்ணப்ப பதிவுகள் முடிவடைந்த நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 – தாள் 1 மற்றும் தாள் 2-க்கான புதிய பாடத்திட்ட விவரத்தை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!