தமிழக அரசு ஊழியர்களுக்கு 17% அகவிலைப்படி (DA) உயர்வு – கோரிக்கைகள் முன்வைப்பு!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு 17% அகவிலைப்படி (DA) உயர்வு - கோரிக்கைகள் முன்வைப்பு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு 17% அகவிலைப்படி (DA) உயர்வு – கோரிக்கைகள் முன்வைப்பு!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மற்றும் ஊழியர்களுக்கு 17 சதவீத அகவிலைப்படி வழங்குதல் உள்ளிட்ட சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ரேஷன் ஊழியர்கள்:

தமிழகத்தில் கடந்த 2021 ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது முதல்வர் முக ஸ்டாலின் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். அதில் அரசு ஊழியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அகவிலைப்படி உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் அமல் சம்பள உயர்வு போன்ற வாக்குறுதிகளை அளித்தார். அதன்படி இவர் ஆட்சிக்கு வந்தவுடன் அகவிலைப்படி 2022ம் ஆண்டு முதல் உயர்த்தப்படும் என்று மானிய கோரிக்கை விவாதத்தின் போது தெரிவித்தார். அதன்படி கடந்த ஜனவரி மாதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது.

தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – கார்டு தொலைந்து விட்டால் என்ன செய்வது?

அதாவது 17 % இருந்து 31 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 7-வது ஊதிய கமி‌ஷன் ஓய்வூதியம் பெறுபவர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு திருத்தப்பட்ட அகவிலைப்படி 32% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டு வாடகைப்படியும் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தின் கோவை மண்டல கவன ஈர்ப்பு கூட்டம் டாடாபாத் பகுதியில் நடைபெற்றது. இதில் அகவிலைப்படி வழங்குதல் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

இந்த கவன ஈர்ப்பு கூட்டத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்போது அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டதை போல ரேஷன் கடை ஊழியர்களுக்கும் 17 சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும் பொருட்களை சரியான அளவில் சரியான எடையில் வழங்க வேண்டும்.பொருட்களை பொட்டலங்களாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here